என் மலர்
சினிமா

ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால்
ஏப்ரலில் ஜுவாலா கட்டாவுடன் திருமணம்- உறுதி செய்த விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story






