என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்-நடிகைகள் வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். இந்த நிலையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

    மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் தடவையாக இந்த படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

    கீர்த்தி சுரேஷ்

    அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கொரோனா பரவியது இதர படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர் நடிகைகளுக்கு பீதியை கிளப்பி உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, தவறான பேசியலால் தன்னுடைய முகம் வீங்கி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலை இல்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரைசா வில்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சனின் முகம் வீங்கி இருக்கிறது.

    ரைசா வில்சன்

    புகைப்படத்தின் கீழ் ரைசா வில்சன் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ அந்த பெண் மறுத்து விட்டார். ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்தனர்’’ என்று கூறியுள்ளார்.
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.
    திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார். லண்டனில் இருந்து லதா திரும்பியபின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், "இனி நடிப்பதாக இல்லை'' என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.

    ஆனால், நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்டபோது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய "பொன்னு விளையும் பூமி'' படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.

    சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து லதா கூறியதாவது:-

    "குடும்ப வாழ்க்கைக்குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.

    2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.

    இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே.பாக்யராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன "அண்ணா நீ என் தெய்வம்'' படத்தை கொஞ்சம் மாற்றி "அவசர போலீஸ்'' என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நான் அவரிடம், "நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.

    லண்டனில் இருந்து எப்போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் `வீனஸ் ஸ்டூடியோ'வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். "நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே எழவில்லையே'' என்று நினைத்துக் கொள்வேன்.

    இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.

    தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாவும் நல்ல தோழிகளாகி விட்டோம். அந்த நட்பு இன்றைக்கும் அதே நிலையில் தொடர்கிறது.

    நான் மஞ்சுளாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரண் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த "பொன்னு விளையும் பூமி'' படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.

    அப்போதும், "நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே'' என்றேன்.

    ஆனால் அவர் விடவில்லை. "எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?'' என்றார்.

    அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்துவிடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.

    அன்றைக்கு `முடியாது' என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. "படத்தின் கதையைக் கேளுங்கள். மறுக்காமல் நடிப்பீர்கள்'' என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.

    எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது. மஞ்சுளாவும் என்னிடம், "இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் `முடியாது' என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கேரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்'' என்றார்.

    ஒரு வழியாக இப்படி 1997-ல் நான் ஒப்புக்கொண்டு நடித்து வெளியான படம் "பொன்னு விளையும் பூமி.''

    கைதட்டல்

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். காமிரா முன் நிற்கும்வரை கூட, "எப்படி நடிக்கப்போகிறேனோ'' என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் "ரெடி... டேக்'' என்றபோது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது. ïனிட் ஆட்கள் கரகோஷம் செய்தபோதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக்கொண்டு விட்டதை உணர்ந்தேன்.

    தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கேரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்.''

    இவ்வாறு நடிகை லதா கூறினார்.

    சென்னைக்கு வந்ததும் `ஏரோபிக்ஸ்' வகுப்புக்கு போகத்தொடங்கியிருந்தார், லதா. இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது, விபத்தில் சிக்கினார்.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "காலை 6 மணிக்கே எழுந்து `ஏரோபிக்ஸ்' கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே `டிரைவ்' செய்தேன்.

    கார் `டிரைவ் இன் உட்லண்ட்ஸ்' ஓட்டலைத் தாண்டும்போது, நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது. ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு, ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி, பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.

    அது காலை நேரம் என்பதால், ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஓடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.

    அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.

    ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, "உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்'' என்றேன். அவரோ, "அதெல்லாம் இருக்கட்டும்மா'' என்று சொல்லி விட்டுப்போய்விட்டார்.

    5 மணி நேரம் அப்பல்லோவில் ஆபரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங் இடித்ததில் கொஞ்சம் தவறினாலும், கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

    தெய்வம் போல் அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.''

    இவ்வாறு லதா கூறினார்.
    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
    வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

    சமீரா ரெட்டி

    ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்.
    மதிவாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் ஒற்று படத்தின் முன்னோட்டம்.
    சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஒற்று’. ‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார், என்பதை குடும்பபாங்காகவும், திரில்லர் ஜானரிலும் சொல்லுவதே ஒற்று.

    ஒற்று படக்குழு

    மனதை வருடும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாடல்கள் மற்றும் காதல், காதல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். 

    ஊட்டு, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது நிறைவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    சக நடிகைகள் ஓடிடியில் தோல்வியை தழுவினாலும் சமந்தா வெற்றி பெற்றே தீர்வேன் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்
    கொரோனா வைரஸ் பரவலால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. முதலில் ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படம் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ என தான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரு படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அந்த இரு படங்களுமே படுதோல்வியைத் தழுவின. 

    அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடர் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத் தொடர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது. அதையடுத்து தற்போது தமன்னா நடிப்பில் ‘11 ஹவர்’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. 

    சமந்தா, காஜல், தமன்னா

    இந்த நிலையில் நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் எண்ட்ரி கொடுக்கிறார். பேமிலி மென் வெப்தொடர் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமந்தா இந்த வெப்தொடரில் வில்லியாக நடிக்கிறார். சக நடிகைகள் ஓடிடியில் தோல்வியை தழுவினாலும் சமந்தா வெற்றி பெற்றே தீர்வேன் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ். 

    தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை. 

    மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

    இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர். 

    இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

    விஜய் சேதுபதி

    அதற்கு பதிலளித்த அவர், இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார். இதனிடையே பகத் பாசிலும் இந்த படத்தில் இணைந்துள்ளதால், இதில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

    பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய, மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
    பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால் அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார். 

    யோகி பாபு

    இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார். சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார். 

    பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா, பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள். 

    இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது.
    விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எஹன் பாட், எட்ல்சி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘99 சாங்ஸ்’ படத்தின் விமர்சனம்.
    சின்ன வயதில் இருந்தே இசையை உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். இந்த காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. ‘‘நீ நூறு பாடல்களை இசையமைத்து கொண்டு வா... உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’’ என்கிறார். 

    அவருடைய நிபந்தனையை நாயகன், ஏற்றுக்கொள்கிறார். நூறு பாடல்களை தேடி, அவர் தன் இசைப்பயணத்தை தொடங்குகிறார். மது பழக்கம் கூட இல்லாத அவரிடம், விளையாட்டாக போதை மருந்தை நண்பர் செலுத்துகிறார். அந்த போதையில் கார் ஓட்டிய நாயகன், விபத்துக்குள்ளாகிறார். 

    99 சாங்ஸ் விமர்சனம்

    போலீஸ் வருகிறது. சோதனையில், நாயகன் போதை மருந்து சாப்பிட்டது தெரியவர அவரை சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறார்கள். அதன் பிறகு நாயகன் என்ன ஆகிறார்? அவருடைய காதல் ஜெயித்ததா, இல்லையா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் எஹன் பாட், மிக அருமையான தேர்வு. கதாநாயகி எட்ல்சி, தன் அழகால் வசீகரிக்கிறார். மனிஷா கொய்ராலாவை தவிர முக்கிய கதாபாத்திரங்களில் அத்தனை பேரும் புதுமுகங்கள். 

    99 சாங்ஸ் விமர்சனம்

    விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு, முதல் பாதியில் இல்லாதது பின்னடைவு. ஒரே வரியில் சொல்லிவிடக் கூடிய எளிமையான கதை. ஏ.ஆர்.ரகுமானே எழுதியிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்ப திரைக்கதையை வளர்த்து இருப்பார்கள் போல தெரிகிறது. சில இடங்களில் வசனம் புரியவில்லை. 

    99 சாங்ஸ் விமர்சனம்
     
    படத்தின் உண்மையான நாயகன் என்றால், அது ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும் தான். வசீகர இசையால் மாயாஜாலம் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் ஆச்சாரி மற்றும் டனே சதமின் ஒளிப்பதிவு, வேற லெவல். ஹாலிவுட் பாணியில், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

    மொத்தத்தில் ‘99 சாங்ஸ்’ இசை விருந்து.
    கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    மறைந்த நடிகர் விவேக், கடந்த 1987-ம் ஆண்டில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் எல்லா கதாநாயகர்களின் படங்களிலும் நடித்தார். நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்த கருத்துகளை பேசி, பல படங்களில் நடித்து இருந்தார். 

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமை புரட்சிக்கு உதவினார். நகைச்சுவை படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால், கதாநாயகனாக மாறினார். ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் கதாநாயகனாக சோனியா அகர்வால் ஜோடியாக நடித்தார்.

    கடைசியாக அவர், படங்களை இயக்க ஆயத்தமாகி வந்ததாகவும், இதற்காக அவர் ஒரு நல்ல கதையை தயார் செய்ததாகவும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

    தியாகராஜன்

    மேலும் அவர் கூறியதாவது: விவேக் என்னை நேரில் சந்தித்து, படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அதுவும் உங்கள் சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் மூலம், நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்று கூறினார். கதை சொல்லுங்கள் என கேட்டேன். 2 மணி நேரம் கதை சொன்னார். 

    கதையை கேட்டு அசந்து போனேன். சூப்பர் கதை என்று விவேக்கை பாராட்டினேன். உங்களை இயக்குனராக அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்னேன். கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்தேன். அதற்குள் விவேக் இறந்து விட்டாரே என்று கண்கலங்கினார், தியாகராஜன்.
    ×