என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் விவேக்கின் நினைவாக மரம் ஒன்றை நட்டுள்ள பிரபல நடிகர், அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், நடிகர் விவேக்கின் நினைவாக நடிகர் நகுல் மரம் ஒன்றை நட்டுள்ளார். மேலும் அந்த மரத்திற்கு ‘மங்களம்’ என பெயர் வைத்துள்ளதாக நகுல் தெரிவித்துள்ளார். 

    நகுல்

    நடிகர் நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் விவேக்குடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் விவேக்கின் பெயர் ‘மங்களம்’. அதனை நினைவு கூறும் வகையில், தற்போது மாமரம் ஒன்றை நட்டு, அதற்கு அவ்வாறு பெயர் சூட்டியுள்ளார். மேலும் மரம் நடும் வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


    மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
    தமிழகத்தில் கொரோனாவின் 2-அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.



    இது தொடர்பாக அதர்வா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்"  என கூறியுள்ளார். 
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார்.
    மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
    சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்திய போது எடுத்த புகைப்படம்

    விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை, சமூகச் சேவையை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன், அவரது உடலை அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. 

    அதன்படி நடிகர் விவேக்கின் உடலுக்கு, 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து விவேக்கின் உடலுக்கு அவரது மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் நடிகர் விவேக்கின் உடல், மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. 
    சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய விவேக் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. விஐபி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களை போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே” என குறிப்பிட்டுள்ளார்.


    மாரடைப்பால் காலமான நகைச்சுவை நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் அவரது வீட்டிலிருந்து தொடங்கியது.
    தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். மேட்டுக்குப்பாம் மின்மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 

    விவேக்கின் இறுதி ஊர்வலம்

    78 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 
    தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி வருகிறார்கள்.

    சௌந்தர ராஜா

    இந்நிலையில் நடிகர் சவுந்தரராஜா, தனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை உறுப்பினர்களுடன் மலர் வளையம், மரக்கன்றுகளுடன் நேரில் சென்று நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கலும் தெரிவித்துள்ளார்.


    படம் இயக்க இருந்த விவேக்கின் கால்ஷீட்டை கடவுள் எடுத்துக்கொண்டதாக படத்தொகுப்பாளர் ரூபன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தொகுப்பாளர் ரூபன், விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எடிட்டர் ரூபனின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “ விவேக்கின் திடீர் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்தில் அவரை சந்தித்து, அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் குறித்து ஆலோசித்தேன், தற்போது கடவுள் அவரின் கால்ஷீட்டை எடுத்துக்கொண்டுள்ளார். மிகவும் கனிவான, தாழ்மையான ஆத்மா நம்மை விட்டு விலகிவிட்டது” என பதிவிட்டுள்ளார்.
    அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ள விவேக் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனான கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    சென்னை:

    நடிகர் விவேக் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளார். இளம் தலைமுறை நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ள அவர் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனான கமல்ஹாசனுடன் மட்டும் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    பலமுறை அதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்தபோதிலும், ஏதோ ஒரு காரணத்தால் கடைசி வரை விவேக்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விட்டது.

    கமல்ஹாசன்

    இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு விவேக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நிகழும் வரை சொப்பனம்: நிகழும் போதே பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு: ‌ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் கமலுடன் இணைந்து ஒரு காட்சியில் கூட நடிக்காத நிலையில் விவேக் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் விவேக்கின் நிறைவேறாத ஆசையாக அது உள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வரிசையில் தற்போது சோனு சூட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கொரோனா தொற்று உறுதி. மனநிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னைத் தனிமைபடுத்திக் கொண்டேன். 

    சோனு சூட்டின் டுவிட்டர் பதிவு

    அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி, விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அப்போது அவர் விவேக்கின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

    விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதி, விவேக்குடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    எண்ணற்ற மரங்களை நட்ட விவேக் மறைவிற்கு காமெடி நடிகர் செந்தில் சினிமா இருக்கும் வரை வாழந்து கொண்டுதான் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.

    விவேக்

    இவரது மறைவிற்கு நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அன்பு தம்பி சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர். எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். சினிமா இருக்கும் வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு செந்தில் கூறியுள்ளார்.
    ×