என் மலர்
சினிமா செய்திகள்
விவேக் சாரின் கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும் என்று நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டுவந்த காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ், ஒரு நடிகராக அவர் விட்டு சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாவிட்டாலும் அவருடைய கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும். அவரின் 1 கோடி மரங்கள் நடும் இலக்கில் 33 லட்சம் மரங்களை அவர் நட்டு விட்டார்.

நாம் அனைவரும் மனது வைத்தால் அந்த 1 கோடி இலக்கை வெகு சில நாட்களிலே அடைந்து விட முடியும். அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.
நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.
நடிகர்கள் சரத்குமார், மயில்சாமி

இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ஷங்கர்

நடிகர்கள் அர்ஜுன், ரோபோ ஷங்கர்

நடிகர் பாபி சிம்ஹா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் சிவா, ஹரிஷ் கல்யாண்

நடிகைகள் ஆத்மிகா, திரிஷா

நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், புகழ்

நடிகர் பரத், இயக்குனர் லிங்குசாமி

நடிகர் விவேக் மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விவேக் மறைவிற்கு மலையாளத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால்
நடிகர் விவேக்கின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மோகன்லால், விவேக் மரணமடைந்ததை அறிந்து மனமுடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

மம்முட்டி
“சினிமா வாழ்க்கை முழுவதும் எங்களை சிரிக்க வைத்த ஒருவர் விவேக், உங்கள் இழப்பு உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ்
“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.
துல்கர் சல்மான்
“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களைத் திரையில் பார்க்கும் போதெல்லாம், உங்களை நன்றாகத் தெரிந்த ஒருவர் போலவே உணர வைக்கும். உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

நிவின் பாலி
“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார், உங்களை மிஸ் செய்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவிற்கு பிரபல ஓவியர், நடிகர், தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் நேரில் அஞ்சலியும், சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்தியையும் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், விவேக்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அப்துல் கலாம் அய்யாவின் கனவுகளை நிஜமாக்கிய கலைஞன்..., சக கலைஞர்களையும் ஊக்குவித்த மகா கலைஞன்... சகோதரர் விவேக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ என்று இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார்.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஹிப்ஹாப் ஆதி, விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட ஹிப்ஹாப் ஆதி, விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “நீங்க எப்பவுமே எனக்கு ஹீரோ தான்” என சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மீசைய முறுக்கு படத்தில், ஹிப்ஹாப் ஆதிக்கு தந்தையாக நடிகர் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்பவுமே நீங்க எனக்கு Hero தான். R.I.P Legend ❤️😞 pic.twitter.com/19bU2hn9x0
— Hiphop Tamizha (@hiphoptamizha) April 17, 2021
நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா

நகைச்சுவை நடிகர்கள் மயில்சாமி, சூரி

நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த்

நடிகர்கள் விக்ரம், நாசர்

இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், தரணி

பிக்பாஸ் பிரபலங்கள் கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி

நடிகைகள் இந்துஜா, பிரியா பவானி சங்கர்

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு திரைப்பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி வருகிறார்கள்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டுவந்த காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் பாண்டியராஜன், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சூரி, மயில்சாமி, நாசர், மனோபாலா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் பேசிய நாசர், அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும் என்று உருக்கமாக பேசி சென்றார்.
மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ 'காமெடி'க் கதாநாயகன்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் விக்ரம் தனிப்பட்ட முறையில் எனக்கும் திரையுலகிற்கும் மாபெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.

இவரது மறைவிற்கு நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘என் மேல் அளவற்ற அன்பு கொண்டவரும், எனது நெருங்கிய நண்பருமான மாபெரும் கலைஞன் விவேக்கின் மரண செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கும், தமிழ் திரைப்பட உலகிற்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றார்.
நடிகர் விவேக் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.

விவேக்கின் மறைவிற்கு பலரும் சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.
#RipVivekpic.twitter.com/MSYVv9smsY
— Rajinikanth (@rajinikanth) April 17, 2021
நடிகர் விவேக் மறைவிற்கு பலரும் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் கருத்துக்களை சொல்லி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். இவர் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனிற்றி இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.
இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜ், வார்த்தைகளால் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.