என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த நடிகர் சோனு சூட், கொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வருகிறார்.
    கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை செய்தவர் சோனு சூட். கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

    கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வருகிறார் சோனு சூட். தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலமே செய்து வருகிறார். 

    சோனு சூட்

    சமீபத்தில் ஒருவர், கொரோனாவால் தனது தந்தைக்கு 75 சதவீதம் நுழையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குர்கான் மருத்துவமனையில் படுக்கை வசதி அளிக்கப்படாததால் தவித்து வருவதாக சோனு சூட்டிற்கு தெரிவித்துள்ளார்.

    அதற்கு பதிலளித்த சோனு சூட், அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கை வசதி கிடைத்து விடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். சொன்னபடியே அவருக்கு உதவியும் செய்துள்ளார் சோனு சூட். இதுபோல் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட்.
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கர்ப்பமான நிலையில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பகல்நிலவு’. இந்த சீரியலில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா முக்கிய வேடங்களில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    காதலர்களாக இருந்த அன்வர் மற்றும் சமீரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் மூலம் அறிவித்திருந்தார்.

    சமீரா

    இந்த நிலையில் சமீரா தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கர்ப்பமான இருக்கும் நிலையிலும் அவர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனேவிடம் விஜய் ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் இன்னும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆலிவுட்டிலும் தனது எல்லைகளை விரிவுபடுத்திய இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக 'கோச்சடையான்' படத்தில் நடித்தவர். 

    தீபிகா தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பின்னணியில், விஜய்யின் "வாத்தி கம்மிங்" பாடல் இசைக்கிறது. அதை அவர் "பி.டி.எஸ் ஆப் பி.டி.எஸ்" என்ற தலைப்பில் தலைப்பிட்டுள்ளார். இது பல்வேறு தருணங்களில் கெத்தாக நடக்கும் அழகான பெண்ணை காட்டுகிறது. பாடலின் இசையுடன் தீபிகா நடப்பது கச்சிதமாக பொருந்திப் போகிறது.

    தீபிகா படுகோனே

    இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் தீபிகாவிடம், விஜய்யுடன் விரைவில் இணைந்து திரையில் நடிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    பிரபல இந்தி நடிகை பிராச்சி தேசாய், பெரிய படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று மீ டூ புகார் கூறியுள்ளார்.
    நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் ஏற்கனவே மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பல முன்னணி இயக்குனர்கள் மீ டூ புகாரில் சிக்கினர்.

    இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிராச்சி தேசாயும் மீ டூ புகார் கூறியுள்ளார். இவர் இந்தியில் ராக் ஆன், லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், கார்பன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    பிராச்சி தேசாய்

    பிராச்சி தேசாய் கூறும்போது ‘ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார். படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ள வில்லை. குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்’’ என்றார்.
    தமிழில் பூ, சென்னையில் ஒருநாள். உத்தம வில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
    கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டும் விழா நடைபெறாது என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 23-ந்தேதி பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 

    இதனை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள். உத்தம வில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி கடுமையாக சாடி உள்ளார். பூரம் திருவிழாவை நடத்தினால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள அவர் பூரம் விழாவை ரத்துசெய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பார்வதி

    ஏற்கனவே கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கண்டித்தார். கும்பமேளா திருவிழாவில் திரண்ட கூட்டத்தையும் விமர்சித்தார். கும்ப மேளாவில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவலையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.
    சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். இது திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் விவேக் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார்.

    இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆத்மிகா

    இதுகுறித்து ஆத்மிகா கூறும்போது, நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே அவர் மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
    அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்' என்றார்.
    கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகர் திடீரென மரணமடைந்திருப்பது, திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை  திடீரென மோசமடைந்தது. 

    டி.எஸ்.மஞ்சுநாத்

    இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 35 வயதே ஆகும் மஞ்சுநாத், கொரோனா தொற்றினால் மரணமடைந்திருப்பது, கன்னட திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சக்திவாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘நாயே பேயே’ படத்தின் முன்னோட்டம்.
    வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக சுப்பு அழகப்பன் பணியாற்றி உள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோபி கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார்.

    தினேஷ்

    இயக்குனர் சக்திவாசன் படம் பற்றி கூறியதாவது: ‘‘நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கிறான்.

    இந்த நிலையில், அவன் ஒரு பெரிய திருட்டில் ஈடுபட்டு வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆக விரும்புகிறான். அவனுக்கு அந்த சந்தர்ப்பம் அமைந்ததா, அதில் அவன் வெற்றி பெற்றானா? என்பதே இந்த படத்தின் கதை” என்றார்.
    தற்போது ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

    இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். 

    பூஜா ஹெக்டே

    அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிவா தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர், இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.

    செல் முருகனின் டுவிட்டர் பதிவு


    இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: 

    “ஓர் மரணம் என்ன செய்யும்
    சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
    சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
    சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
    சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
    சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்

    ஆனால் அண்ணா...
    உண்மையான ஜீவன்
    என் உயிர் தோழன்
    என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண
    காற்றில் கரைந்து விட்டாயே!

    இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!
    இனி என் முருகனுக்கு யார்? துணை
    விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?
    இனி அவனுக்கு

    யார்? துணை...
    யார்? துணை...
    யார்? துணை...”

    இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    நடிகர் பஹத் பாசிலின் மனைவியும், நடிகையுமான நஸ்ரியா, தெலுங்கில் ‘அன்டி சுந்தரினிகி’ படம் மூலம் அறிமுகமாக உள்ளார்.
    தமிழில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, கடந்த 2014-ம் ஆண்டு, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 

    இந்நிலையில், நடிகை நஸ்ரியா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவரது முதல் தெலுங்கு படமாகும். இப்படத்தில் நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நஸ்ரியா

    அன்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி படமாக இது தயாராகிறது. “முதலாவது எப்போதுமே ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல் தான்” என நடிகை நஸ்ரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
    நடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை இயக்க அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய், ஜூனியர் என்.டி.ஆர்

    நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. அதேபோன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    ×