என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து உள்ளார்.
    ‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். 

    இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். 

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 22) காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


    பச்சை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

    தனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.

    சமந்தா

    அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது. அதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.
    ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி, தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    பொன்னியின் செல்வன் படக்குழு

    இதையடுத்து ஒரு மாதம் இடைவெளி விட்டு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. 

    பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் போன்ற படங்கள் உள்ளன.

    ஆனந்த் எல் ராய், அனிருத்

    இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் தனுஷின் ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
    மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. 

    இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுவந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

    ரஜிஷா விஜயனின் இன்ஸ்டகிராம் பதிவு

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜிஷா தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறி உள்ளார். படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை, கொரோனா தொற்று உறுதியானதும், தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஏராளமான நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது. 

    ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், டோவினோ தாமஸ், நடிகைகள் அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், இயக்குனர்கள் சுந்தர் சி, விஜயேந்திர பிரசாத் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் சிலர் சிகிச்சைக்கு பின் குணமாகி தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

    இந்நிலையில் இளம் நடிகையான சாரா குர்பால் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சாரா குர்பாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

    சாரா

    இதையடுத்து சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னைச் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்கிறார்.
    அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

    இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

    அஜித்

    ஆனால் தற்போது உலகமெங்கிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் அந்த சண்டைக் காட்சியை இந்தியாவிலேயே படமாக்கலாமா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் ரிலீசும் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.
    கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாக பிரபல நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவுமியா சேத். தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

    காதல், திருமண வாழ்க்கை குறித்து சவுமியா சேத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான் கடந்த 2019-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தேன். தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏற்கனவே நான் கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. 

    சவுமியா சேத்

    தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எனது பெற்றோர் தடுத்துவிட்டனர். என்னுள் இருந்த தற்கொலை உணர்வையும் மாற்றினார்கள். குழந்தைக்காக வாழ வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இருப்பினும் கொரோனாவால் வரமுடியவில்லை. காதலில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.
    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.
    சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.

    சின்னத்திரை அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "சினிமாவில் இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாகவே இருந்தேன். டைரக்டர்கள் பி.வாசு, மணிவண்ணன், கஸ்தூரிராஜா, ராம.நாராயணன் போன்றோர் படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருந்தேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் -சிவாஜியை பல படங்களில் இயக்கிய டைரக்டர் கே.சங்கரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. "ராமாயணம்'' என்ற பெயரில் ஒரு புராணத் தொடர் எடுக்க இருப்பதாகவும், அதில் ராதாரவி ராவணனாக நடிப்பதாகவும் சொன்னவர், நான் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    `பிரபல டைரக்டர் என் மீது நம்பிக்கை வைத்து கேட்கிறார். எனவே மறுக்கக்கூடாது' என்று, அந்தத் தொடரில் நடித்தேன். 1997-ல் இந்த தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.

    தொடர்ந்து பாலாஜி டெலிபிலிம்சுக்காக "பவித்ர பந்தம்'' என்ற தெலுங்கு சீரியலிலும் நடிக்கலானேன்.

    "கிழக்கே போகும் ரெயில்'' படத்தில் நடிகை ராதிகா அறிமுகமாகியிருந்தார். அடுத்து "அன்னப்பறவை'' என்ற படத்தில் நானும் ராதிகாவும் நடித்தோம். அந்தப் படத்தில் ராதிகாவின் இளம் வயது அம்மா நான். இந்தப் படத்தில் நடிக்கும்போதே, ராதிகா எனக்கு நல்ல தோழியானார். அதோடு நடிகை ஸ்ரீபிரியா இவருக்கு நெருக்கமான தோழி. என் தம்பி ராஜ்குமார் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டபிறகு, ராதிகா இன்னும் எனக்கு நெருக்கமானார்.

    இந்த நட்பின் அடிப்படையில், ராதிகா சின்னத்திரைக்கு வந்த நேரத்தில் "இதி கத காது'' என்ற மெகா தொடரில் என்னை நடிக்கும்படி கேட்டார். உயிர்த் தோழிகளாக இருக்கும் இருவர் காலச் சூழலில் ஜென்ம எதிரிகள் போல் மோதிக்கொள்ளும் கதை. தெலுங்கில் இந்த "மெகா'' சீரியலுக்கு மகா வரவேற்பு.

    ராதிகாவுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்தது `சித்தி' தொடர். இந்த தொடரில் 250 எபிசோடு வரை நான் கிடையாது. கதைப்படி ஒரு பெற்றோர் 250 எபிசோடு தாண்டி அறிமுகமாகிறார்கள். அதில் `அம்மா' கேரக்டரில் ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் அபிப்ராயப்பட்டிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன ராதிகா, "நீங்களே நடித்தால் சிறப்பாக இருக்கும்'' என்றார். ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    என் போர்ஷன் அதிகபட்சம் 30 எபிசோடு வரை வந்திருக்கும். எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த கேரக்டராக அது அமைந்தது.

    தொடர்ந்து பாலாஜி பிலிம்சுக்கு நாலைந்து தொடர்கள் நடித்தேன். இந்த நேரத்தில் ஏவி.எம்.மில் இருந்து "ஈ நாட்டு ராமாயணம் இல்லாலு'' என்ற தெலுங்கு தொடரில் நடிக்க கேட்டார்கள். அது ஒளிபரப்பாகி மிகப் பெரிய "ஹிட்.''

    தொடர்ந்து ஹரிராஜனின் தொடர், பாலாஜி டெலிபிலிம்சின் "கேளுங்க கேளுங்க மாமியாரே'' என்று தொடர்ந்தேன். இதில் `கேளுங்க கேளுங்க மாமியாரே' தொடர், முற்றுப்பெறாமல் பாதியிலேயே நின்று போனது வருத்தம் தந்தது.

    ராதிகாவின் "செல்வி'' தொடரில்தான் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை. நான் தெலுங்கில் பிசியாக இருந்த நேரத்தில் ஒருநாள் ராதிகாவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார். `செல்வி' என்ற பெயரில் புதிய தொடர் தயாரிப்பதாக சொன்னவர், "இலங்கையில்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இலங்கையில் `ஓஹோ'வென வாழ்ந்த ஒரு குடும்பம், அங்கே சொத்துக்களை இழந்து தமிழ்நாட்டில் தஞ்சமாகிற கதை. கோடீசுவரப் பெண், நடுத்தர வாழ்க்கைக்கு பழகி, அனுதினமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய கேரக்டர் இருக்கிறது. நீ செய்தால் சரியாக இருக்கும் என்பது ராதிகாவின் எதிர்பார்ப்பு'' என்றார்.

    இந்த கேரக்டரில் நடிக்க நடிகை ராதிகாவும், டைரக்டர் சுந்தர் கே.விஜயனும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்கள். இந்தத் தொடரில் நான் பேசிய வசனங்கள், "என்ன புள்ள!'' "உன்னைப் பார்த்தா எனக்கு படபடங்குது'', "ரொம்ப டூ மச்'' போன்றவை ரசிகர்களிடையே இப்போதும் பிரபலம்.

    இலங்கையில் பங்களாவில் வாழ்ந்து பழக்கப்பட்ட பெண், சென்னையில் புறாக்கூண்டு போன்ற வீட்டில் வாழும்போது என் கேரக்டர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், ரசிகர்களை பாதித்திருக்கிறது. இதற்கு உதாரணமான விஷயமும் நடந்தது.

    தி.நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பூக்காரப் பெண்மணி ஓடி வந்தாள். "அம்மா அம்மா! பூ வாங்கிக்கம்மா'' என்று நாலைந்து முழம் பூவை என் கையில் திணித்தாள். "காசு எவ்வளவு அம்மா?'' என்று நான் கேட்டு பணம் கொடுக்க முயன்றபோது, அந்தப் பெண் பணத்தை வாங்க மறுத்து விட்டாள். அதோடு, "போம்மா! உன் கிட்ட காசு வாங்கினா தப்பும்மா! தலைவரோட (எம்.ஜி.ஆர்) ஜோடியாக எல்லாம் நடிச்ச நீ, இப்ப எவ்வளவு கஷ்டப்படறேன்னுதான் `செல்வி' தொடரில் பார்த்தேனே!'' என்று கூறினாள்! அப்போதுதான் செல்வியில் என் கேரக்டர் எந்த அளவுக்கு மக்களிடம் ஊடுருவியிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

    இப்போது கலைஞர் `டிவி'யில் ஒளிபரப்பாகி வரும் "மஞ்சள் மகிமை'' தொடரிலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்.''

    இவ்வாறு லதா கூறினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. 

    ரம்யா பாண்டியன்

    அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் அவர் தற்போது சட்டை பட்டனை ஒருபக்கமாக கழட்டிவிட்டு கிளாமராக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா ஒர்க் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவின் மனைவியாவார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த ’யுவரத்னா’ என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    சமீபத்தில் யுவரத்னா படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது.

    சாயிஷா

    தற்போது தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை சாயிஷா வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில் இரண்டு கைகளையும் தூக்கி அப்படியே எகிறி குதிக்கிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, பிரபல நடிகர் ஒருவர் தனது தந்தை மகனுடன் சேர்ந்து மரம் நட்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் நடிகர் அருண் விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தனது இறுதி மரியாதையை விவேக்கிற்கு செலுத்தியுள்ளார். அருண் விஜய், தனது தந்தை விஜயகுமார் மற்றும் மகன் ஆர்ணவ் ஆகிய மூவரும் மரம் நடும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    அருண் விஜய்

    மேலும், “பூமியை பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை, அடுத்த தலைமுறைக்கு அழகாக கற்றுக்கொடுத்தீர்கள்.. எங்கள் எல்லோருக்கும் தூண்டுகோலாக இருந்ததற்கு நன்றி சார்” என கூறியுள்ளார் அருண்விஜய்.
    ×