என் மலர்
சினிமா செய்திகள்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமான சிவாங்கி, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சிவாங்கிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் சிவாங்கி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களின் ஒருவரான கேப்ரில்லா அணிந்த ஜீன்ஸ் ஒன்றுக்கு ’ரொம்ப கிழிஞ்சி இருக்கே’ என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கிண்டல் செய்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்த புகைப்படத்தை கேப்ரில்லா பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களில் ஒருவரான ரியோ ராஜ் ’இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சு இருக்கு’ என்று கிண்டலடித்துள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனாளி ‘எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.

தற்போது நாளை மாலை 6 மணிக்கு லாபம் படத்தின் 2 வது சிங்கில் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்பாடல் இப்படத்தின் இயக்குநர் மறைந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்பிப்பதாக படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.
மேயாத மான், பிகில், மகாமுனி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை இந்துஜாவின் முதல் மகன் புகைப்படம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் மேயாத மான், மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. விஜய்யின் பிகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இந்துஜா, ‘சூப்பர் டூப்பர்’ படத்தில் லேசாக கவர்ச்சி காட்டினார்.


திரைப்படங்களை போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நாய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் இந்துஜா, Hello My First Son என்று பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் சிக்கலாக மாறி வரும் நிலையில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்நிலையில் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் தொகை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் 'இந்தியாவில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்' என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்தை நக்கல் செய்யும் விதமாக பதிவிட்ட காமெடி நடிகை சலோனி கவுர் 'கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளனர்' என சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கங்கனா தாத்தா காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். அப்போது இருந்தது போலவே இப்போதும் வாழ முடியாது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் தேவை' என தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கிற்கு, சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படக்குழுவினர் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் அடங்காதே படத்தின் குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் ஹீரோயினாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.


இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நீண்ட காலமாக உருவாகி வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இதையடுத்து விரைவில் தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன், அடுத்ததாக அரசியல் நிருபராக களமிறங்க இருக்கிறார்.
பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.

தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில் அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர். தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கொரோனா வைரஸ் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது.
கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது.

பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கிறது.
ஏதோ ஒரு தெரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு மாதிரி எங்களால் சுற்ற முடியவில்லை. படப்பிடிப்பு அரங்கிலும் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. இந்த வேதனை எனக்குள் நிறைய இருக்கிறது. முக கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ என்ற ஏக்கம் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் பாப்பிலோன் படத்தின் முன்னோட்டம்.
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.
அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.
இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் இப்படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.
இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்தாண்டு ஜூன் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கியதால், படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதால், திரையரங்குகளில் 50 % இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவி படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனிடையே, தலைவி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், இதனை தலைவி படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தலைவி படத்தை முதலில் திரையரங்கில் தான் வெளியிடுவோம், அதன்பின்னர் தான் ஓடிடி-யில் வெளியிடப்படும் என விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை மனிஷா யாதவ் தெரிவித்துள்ளார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு இவர் நடிப்பில் ‘சண்டிமுனி’ திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, மற்றபடி எந்தவித பிரச்சனையும் இல்லை. அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.






