என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த விவேக்கின் நினைவாக நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ரம்யா பாண்டியன், மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ரம்யா பாண்டியன்

    நேற்று சிம்புவின் மாநாடு படக்குழுவினர் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், விவேக் மறைவையொட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன் மற்றும் காவலர்களும் நட்டு சிறப்புரை ஆற்றினார்.
    ரம்யா பாண்டியன்

    கிஷோர் எம்.ராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராமர் நடிப்பில் உருவாகி வரும் மிடில் கிளாஸ் படத்தின் முன்னோட்டம்.
    'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ், அடுத்ததாக ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். 

    அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதையை எழுதி, இயக்குகிறார் கிஷோர் எம்.ராமலிங்கம். 

    முனீஸ்காந்த்


     
    'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றார்கள். எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரிகின்றனர். 
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை.

    இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அதேபோல் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் ஷங்கர்.

    இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், ஷங்கர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

    ஷங்கர்

    அதன்படி ஷங்கர் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியன் 2 படத்தை அக்டோபருக்குள் முடித்துத் தர முயற்சிக்கிறேன் என குறிப்பிட்டுள்ள ஷங்கர், நடிகர் விவேக் மறைவால் வேறு நடிகரை வைத்து காட்சிகள் படமாக்க வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நீதிமன்ற உத்தரவால் இந்தியன் 2 படப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்த நீதிபதிகள், லைகா தரப்பும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி இந்தியன் 2 படப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். 
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வருகிறார். ரைசா சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 

    அவர் கூறியிருந்ததாவது: “முகப் பொலிவு செய்வதற்காக அழகியல் மருத்துவரிடம் சென்றேன். அப்போது தேவையற்ற சில வி‌ஷயங்களை செய்து எனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி விட்டது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    ரைசா வில்சன்

    இந்த நிலையில் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கேட்டு ரைசாவின் வக்கீல், சம்பந்தப்பட்ட அழகியல் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: “ரூ.1.27 லட்சம் ரூபாய் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவுபெறாமல் ரத்தக்கசிவும் வீக்கமும் தான் ஏற்பட்டது. உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டது. 15 நாட்களில் ஒரு கோடி இழப்பீடு தராவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்”. இவ்வாறு அந்த நோட்டீசில் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
    ‘அரண்மனை’ பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். 

    இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். 

    அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுந்தர் சி, ஆர்யா, விவேக், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘விடுதலை’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர். 

    விடுதலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குனராகவும், ஜாக்கி கலை இயக்குனராகவும் பணியாற்றுகின்றனர். தமிழில் தயாராகும் இப்படத்தை, பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். விடுதலை என்ற பெயரில் ஏற்கனவே கடந்த 1986ம் ஆண்டு சிவாஜி, ரஜினி நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா 2-வது அலை காரணமாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாம்.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்து உள்ளது. இதனால் சினிமாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 

    தற்போதைய ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் தினமும் இரவுக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்கிற்கு அதிக கூட்டம் வரும். அன்று முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தயாரிப்பாளர்கள் கவனம் மீண்டும் ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது. அந்தவகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர்

    துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கதைகளத்துடன் உருவாகி உள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக சல்மான் கான் நடித்துள்ள படம், ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ளதாம்.
    பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். ராதே படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் ரிலீசாகவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக வெளியிடப்படாமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிடப்படும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

    ராதே படத்தின் போஸ்டர்

    தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ராதே படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுமா? என கேள்வி எழுந்து வந்தது. ஆனால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் என தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் வெளியீட்டில் சிறிய மாற்றத்தை செய்துள்ளனர்.

    ராதே படம் தியேட்டரில் ரிலீசாகும் அதே நாளில் ஓடிடி-யிலும் வெளியாக உள்ளது. ஆனால் இதனை ஓடிடி-யில் ஒவ்வொரு முறை பார்ப்பதற்கும் பணம் கட்ட வேண்டுமாம். படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தால் படக்குழு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
    திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் - ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா தம்பதியின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்

    இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய்,  ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி,  ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி,  சாம்ஸ், சென்ராயன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்

    மேலும் நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார், தயாரிப்பாளர்கள் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், அழகன் தமிழ்மணி, இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், நக்கீரன் கோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்

    விழாவுக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

    மணிகண்டன், விஜய் சேதுபதி

    இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

    சிவகார்த்திகேயன்

    தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    குடும்பத்தினருக்காக கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருப்பதாக நடிகை பிரியா வாரியர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன். 

    கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2 நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன்.

    பிரியா வாரியர்

    முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்த பிறகுதான் குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பேன. சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கண் அடிக்கும் காட்சியால் பிரபலமான பிறகு படிப்பை விட்டு விட்டேன். 

    இப்போது அம்மா எம்.பி.ஏ. படிக்க சொல்கிறார். எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்புதான் முக்கியம். நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்து இருக்கிறார்கள். அதை சொல்லி அம்மாவை சமாதானப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    ×