என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார். 

    தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகிள் 15 ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதோடு திமுக-வின் இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்டார்.

    உதயநிதியின் மனைவி கிருத்திகாவும், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களுள் ஒருவர். இவர் வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

    மகன் இன்பநிதியுடன் உதயநிதி ஸ்டாலின்

    இந்நிலையில், நடிகர் உதயநிதி, தனது மகன் இன்பநிதியின் தோளில் சக நண்பரைப் போல் கை போட்டு தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள், உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர். வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் அமைந்தது. 

    தனுஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்தாண்டு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’.
    மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

    நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

    விஜய் சேதுபதி, சுருதிஹாசன்

    இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
    அழகியல் மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும், இதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார்.

    பைரவி, ரைசா

    இதையடுத்து நடிகை ரைசா அவரிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். 

    படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    ராங்கி படத்தின் போஸ்டர் 

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தி திரையுலகில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990-ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

    இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றன. சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993), பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள்.  இதன்பின்னர் அவர்கள் கடைசியாக, தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.  கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர்.

    இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன் சேர்க்கப்பட்டார். 66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    இதனை அவரது மகன் சஞ்சீவ் ரத்தோடு உறுதி செய்துள்ளார். ரூ.10 லட்சம் பணம் கட்டாத சூழலில் ஷ்ரவனின் உடலை எடுத்து செல்ல மருத்துவமனை அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

    ஷ்ரவன் மறைவை தொடர்ந்து பலரும் டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
    நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.

    சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927-ல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிந்தாமணி'' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.

    இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.

    முதல் படம்

    உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக, 1937-ல் "சுகுணசரசா'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில், மூன்று நாட்கள் நடித்தார்.

    இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.

    ஜெமினியின் முதல் படமான "மதனகாமராஜன்'' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.

    இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    "இது காதல் திருமணம் மட்டுமல்ல. கலப்பு திருமணமும்கூட. என் தாய் மொழி மராத்தி. அவர் தமிழர்.

    இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.

    1945-ல் ஜெமினி தயாரித்த "கண்ணம்மா என் காதலி'' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.''

    இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.

    1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான "சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, "இச்சைகளைத் தீர்க்கும் பச்சை மலைப்பாவை''யாக மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.

    சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.

    ஜெமினியின் வெற்றிப்படமான "சம்சார''த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.

    "வள்ளியின் செல்வன்'' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.

    கே.பாலசந்தர் தயாரித்த "அரங்கேற்றம்'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

    சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய், அண்மையில் காலமானார்.
    மேயாத மான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகரை கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
    மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    பிரியா பவானி சங்கர் - சதீஷ்

    இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.


    தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு கொடுத்து வரும் தாமுவிற்கு தேசிய கல்வியாளர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
    தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. 

    கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. 

    தாமு

    கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அன்பு பற்றி ஒரு பதிவு செய்திருக்கிறார்.
    காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

    செல்வராகவன்

    இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்! வாழ்வில் மிகக் கடினம் அதுதான்’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை மேக்னா எலனும் அதுபோல் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
    மதுர்யா புரோடக்ஷ்ன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் வேற மாதிரி'. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    இப்படத்தை பற்றி இயக்குநர் தேவகுமார் கூறுகையில், ‘நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் 'சிக்னல்' என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்ட சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சார்ந்ததாகும். நாயகி மேக்னா எலன் முதன்முறையாக கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார்.

    மேக்னா எலன்

    படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது’ என்றார்.
    பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்த நடிகர் விஷ்ணு விஷால், இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
    வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

    விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா

    அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ×