என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.
    அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார். 

    வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

    வலிமை

    இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் கொரோனா ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
    கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை செய்தவர் சோனு சூட். கடந்த சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

    சோனு சூட்

    கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வந்தார் சோனு சூட். இந்த நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார். அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்திருக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சோனு சூட் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தற்போது ஆண்கள் ஹாஸ்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
    பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.

    சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.

    ஹாஸ்டல்

    தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நான்கு ஆண்களுக்கு நடுவில் பிரியா பவானி சங்கர் உட்கார்ந்து இருக்கிறார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில், விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் பலத்த யோசனையில் உள்ளனர்.

    அப்படி விவேக் நடிப்பில் உருவாகி வந்த மிகப் பெரிய படம்தான் இந்தியன் 2. சங்கர் மற்றும் லைகா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார் கமல்.

    அதுமட்டுமில்லாமல் இதுவரை விவேக் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை என்ற ஆசையை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் தற்போது அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்து வருகிறார்களாம்.

    சங்கர் - விவேக்

    விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாமா, அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். 
    தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஆர்கே சுரேஷுக்கு குழந்தை பிறந்துள்ளது.
    தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

    ஆர்கே சுரேஷ்

    நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.

    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது லாபம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் ரம்ஜான் பண்டிகை நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    விஜய் சேதுபதி

    இந்நிலையில் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. Man of Fusion என்ற தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் இந்த புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். 
    தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி பாண்டியன், அசுரனை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தர்ஷன், தீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதையடுத்து தனது அப்பாவுடன் சமீபத்தில் இவர் நடித்த ‘அன்பிற்கினியாள்’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தற்போது கீர்த்தி பாண்டியன் மிகுந்த உற்சாகத்துடன் அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

    கீர்த்தி பாண்டியன்

    தற்போது கீர்த்தி பாண்டியன் அவரது வீட்டில் புதிதாக பிறந்துள்ள கன்றுக்குட்டியை தனது குடும்பத்தில் ஒருவர் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் இந்த வருடம் பொங்கலுக்கு அருகில் எங்கள் தோட்டத்தில் பிறந்த மற்றொரு புதிய குடும்ப உறுப்பினரைச் சந்தியுங்கள். அசுரன், காளை மாடு. மேலும், இவரது கால்களைப் பாருங்கள். ஒரு நாள் அவர் அவற்றைப் பயன்படுத்தி பறக்கப் போகிறார்.” என்று தெரிவித்ததுடன் மிகுந்த பாசத்துடன் அந்த கன்றுக்குட்டியை ஆறத் தழுவியுள்ள தருணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    தேவகுமார் இயக்கத்தில் மேக்னா எலன், நரேன், மனோ பாலா நடிப்பில் உருவாகி வரும் ‘நான் வேற மாதிரி’ படத்தின் முன்னோட்டம்.
    மதுர்யா  புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா  தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் வேற மாதிரி'. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    இப்படத்தை பற்றி இயக்குனர் தேவகுமார் கூறுகையில், “நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் 'சிக்னல்' என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும்.

    மேக்னா

    நாயகி மேக்னா எலன் முதன்முறையாக கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா, முத்துக்காளை மற்றும் புதுமுகங்கள் மனோ கிருஷ்ணா, ரமேஷ் குமார், கார்த்திக் ராஜா, தாணு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    நாயகியை மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள் ஏன் எதற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். படத்திற்கு பரிமள வாசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு  கார்த்திகேயன், பாடல்கள் விவேகா மற்றும் கார்கோ, நடனம் ஜாய்மதி.

    படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.
    விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்ப உள்ளனர்.

    இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும், சில நாட்கள் ஓய்வுக்கு பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். முதலில் சென்னையில் விஜய் - பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். 

    விஜய்

    அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தை, அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
    பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

    மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அந்தகன் படக்குழு

    இந்நிலையில், நடிகர் கார்த்திக் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். பிரசாந்த், சிம்ரன், தியாகராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
    ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். 

    ரஜினி

    தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’, படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 

    தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் நடிகை ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். 

    ஹன்சிகா

    திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது.

    இதேபோல் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடிக்கும் ‘இரவின் நிழல்’ என்கிற படமும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×