என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சைமன் மெகாய்டு இயக்கத்தில் லீவிஸ்டன், ஜெசிகா, மெக்கட் புரூக்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மொர்டல் காம்பட்’ படத்தின் விமர்சனம்.
    உலகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுக்கும், வேற்று உலகை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் மொர்டல் காம்பட். உலகத்தில் பிறக்கும் போதே, உடலில் டிராகன் வடிவிலான குறியீட்டுடன் பிறப்பவர்கள் இந்த சண்டைக்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள். 

    வேற்று உலகத்தை சேர்ந்த கும்பல், உலகத்தை கைப்பற்ற பார்க்கிறார்கள். இதற்காக உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுடன் அவர்கள் மோத வேண்டும். இதில் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்களால் உலகத்தை கைப்பற்ற முடியும். ஆனால் சதித் திட்டம் தீட்டும் வேற்று உலக கும்பல், சண்டைக்கு முன்பே உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்களை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

    மொர்டல் காம்பட் விமர்சனம்

    அதேபோல் மறுபுறம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்த குழுவினரை ஒன்று சேர்த்து பயிற்சி அளிக்கும் முயற்சியும் நடக்கிறது. அந்தவகையில் தனக்குள் இருக்கும் சக்தியை அறியாமல் வாழ்ந்து வரும் நாயகனை, அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். பயிற்சிக்கு பின்னரும் அவரால் சூப்பர் பவரை வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன்பின் என்ன ஆனது? வேற்று உலகத்தை சேர்ந்த கும்பலுடன் சண்டையிட்டு நாயகன் உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் உள்ளன. அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக லீவிஸ்டன், ஜெசிகா, மெக்கட் புரூக்ஸ், ஜோஷ் லாஷன் ஆகியோரின் நடிப்பு அட்டகாசம். 

    மொர்டல் காம்பட் விமர்சனம்

    இயக்குனர் சைமன் மெகாய்டு, படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், திறம்பட கையாண்டுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது ஆக்‌ஷன் காட்சிகள் தான். குறிப்பாக கடைசி அரைமணி நேரம் ஆக்‌ஷன் அதகளம் என்றே சொல்லலாம். படத்தில் சில காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பது பின்னடைவாக தெரிகிறது. குறிப்பாக நாயகன் பயிற்சி எடுக்கும் காட்சி ரொம்பவே நீளம். 

    பெஞ்சமினின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கின்றன. ஜெர்மைன் மெக்மைகிங், பீட்டர் மெக்காப்ரே ஆகியோரில் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மொர்டல் காம்பட்’ ஆக்‌ஷன் விருந்து.
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. 

    இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

    கவுதம் மேனன், விடுதலை பட போஸ்டர்

    இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

    வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக, ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்றது.
    விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் ரவிதேஜா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற கிராக் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி என்பவருக்கும் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

    ஜி.கே.விஷ்ணுவின் திருமணத்தில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி

    கொரோனா ஊரடங்கு காரணமாக, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மிக எளிய முறையில் நடைபெற்ற இத்திருமணத்தில், மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர், மிக முக்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    ‘தளபதி 65’ படக்குழு திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து உள்ளனர்
    நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள். 

    அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால், அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் விஜய்

    தளபதி 65 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
    காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
    கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.

    ஷான்யா

    இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.

    அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள் பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர். 

    தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
    அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். 

    அதுல்யா ரவி

    “பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
    எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படத்தின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

    இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.

    விஜய் சேதுபதி

     இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர். படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.

    பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    ஜிவி பிரகாஷ்

    ரஜினிகாந்த் பதிவு செய்ததாக சொல்லப்படுவதற்கு முன்பே அகில இந்திய பாரத் பீப்பிள் சேவா பார்ட்டி பெயரை பயன்படுத்தி படம் எடுத்து விட்டோம். குறிப்பிட்ட யாரையும் படத்தில் விமர்சிக்கவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    தணிக்கை குழுவினர் ஏற்காமல் கட்சி பெயரை படத்தில் இருந்து நீக்கினர். இதுபோல் 10 நிமிடங்களுக்கு மேல் ஓடும் 100-க்கும் மேற்பட்ட சர்ச்சை காட்சிகளை வெட்டி நீக்கி விட்டு, யூ-ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.
    பிறர் படமாக்கத் துணியாத புரட்சிகரமான கதைகளைப் படமாக்கி வரலாறு படைத்தவர், கே.பாலசந்தர். ரஜினிகாந்தையும், மற்றும் ஏராளமான புதுமுகங்களையும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

    சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் தோன்றி, நாடக உலகில் புகுந்து, பிறகு சினிமா உலகிற்கு வந்தார்.

    தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடி என்ற கிராமம்தான் பாலசந்தரின் சொந்த ஊர்.

    அந்த கிராமத்தின் முன்சீப்பான கைலாசம் அய்யர் -காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1930 ஜுலை 9-ந்தேதி பிறந்தார்.

    படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்ததுடன் நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நண்பர்களை வைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையிலேயே நாடகங்கள் நடத்துவார்.

    ஆரம்பக் கல்வி முடித்ததும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு படிக்கும் போதும் நாடக ஆசை தொடர்ந்தது. அவரே கதை -வசனம் எழுதி, முக்கிய வேடங்களில் நடிப்பது வழக்கம்.

    கல்லூரியில் ஹாஸ்டல் தினம், பட்டமளிப்பு விழா என்றெல்லாம் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, பாலசந்தரின் நாடகம் நிச்சயம் இடம் பெறும்.

    "பி.எஸ்.சி'' பட்டம் பெற்ற பின், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை பார்த்தார். ஒரு வருட காலம் ஆசிரியர் பணியில் நீடித்தார். அங்கும், மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.

    அதுமட்டுமல்ல; சட்டசபை எப்படி நடக்கிறது, பாராளுமன்றம் எப்படி நடக்கிறது என்பதை விளக்கும் வகையில், "மாதிரி சட்டசபை'', "மாதிரி பாராளுமன்றம்'' ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி, பாராட்டு பெற்றார்.

    சென்னையில் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், 1950-ல் பாலசந்தருக்கு வேலை கிடைத்தது. ரத்தத்தில் ஊறிய நாடக ஆசை அப்போதும் தொடர்ந்தது.

    மாலை ஐந்து மணி ஆனதும், அதிகாரிகளும், ஊழியர்களும் அவரவர் வீட்டுக்கு கிளம்புவார்கள். பாலசந்தரோ, ராஜா அண்ணாமலை மன்றம் அல்லது ஆர்.ஆர்.சபாவுக்குப் போவார். "இன்று என்ன நாடகம்? நாளை என்ன நாடகம்? யார் -யார் நடிக்கிறார்கள்?'' என்று அறிவிப்பு பலகைகளைப் பார்ப்பார். முக்கிய நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்த்து விடுவார்.

    அந்தக் காலக்கட்டத்தில், பாலசந்தருக்கு நாடகம் மீதுதான் ஆசை இருந்ததே தவிர, சினிமாவை லட்சியமாகக் கொள்ளவில்லை.

    ஏ.ஜி.அலுவலகத்தில் ஒரு விழா. மேல் அதிகாரியை பாலசந்தர் சந்தித்து, "இந்த விழாவில் நாடகம் நடத்தலாம். நாடகம் நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு'' என்று கூறினார்.

    அதற்கு அதிகாரி அனுமதியளித்தார்.

    உடனே நாடகத்தைத் தயாரிக்கத் தொடங்கினார், பாலசந்தர்.

    சென்னையில் அவர் முதன் முதலாக நடத்திய இந்த நாடகத்தின் பெயர் "சினிமா விசிறி.'' எப்போதும் சினிமா பற்றி பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர்தான் இந்த நாடகத்தின் கதாநாயகன்.

    இந்த நாடகத்தின் கதை, வசனம், நடிப்பு அனைத்தும் பாலசந்தர்தான்.

    நாடகத்தைப் பார்த்தவர்கள், பாலசந்தரின் திறமையை வானளாவப் புகழ்ந்தார்கள்.

    (இந்த நாடகம்தான் பிற்காலத்தில் "எதிர்நீச்சல்'' என்ற பெயரில் படமாகியது. சினிமா பித்து கொண்ட கதாநாயகனை, பட்டுமாமி என்ற பெயரில் கதாநாயகியாக மாற்றினார், பாலசந்தர்.)

    "சினிமா விசிறி'' நாடகத்தைப் பார்த்த சினிமா நடிகர் வி.கோபாலகிருஷ்ணன், பாலசந்தரை பார்க்க வந்தார். அவர் தனியாக நாடகக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

    "சினிமா விசிறி நாடகத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிரமாதம். என்னுடைய நாடகம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும்'' என்று பாலசந்தரிடம் கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

    அதற்கு பாலசந்தர் சம்மதித்தார். கோபாலகிருஷ்ணனின் "உயிருள்ளளவும்'' என்ற நாடகத்தில் நடித்தார். அப்போது பாலசந்தருக்கு வயது 21. நடித்தது அப்பா வேடத்தில்!

    வயதான தோற்றத்தில் அற்புதமாக நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இதைத்தொடர்ந்து, வி.எஸ்.ராகவன் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு பாலசந்தரை தேடி வந்தது.

    வெளி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த பாலசந்தர் சொந்தமாக "ராகினி ரிக்ரியேஷன்ஸ்'' என்ற பெயரில் நாடகக்குழு அமைத்தார். நாடகம் நடத்த சபாக்களை மட்டும் நம்பியிராமல், திருமண வீடுகளிலும், மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளிலும் நடத்தி வந்தார்.

    அப்படி ஒரு திருமண வீட்டில் அவர் நடத்திய நாடகத்தின் பெயர் புஷ்பலதா. "புஷ்பா'', "லதா'' என்ற இரண்டு பெண்களைப் பற்றி மூன்று கல்லூரி மாணவர்கள் அடிக்கும் அரட்டைதான் நாடகம். கடைசிவரை புஷ்பாவோ, லதாவோ வரமாட்டார்கள்!

    பாலசந்தரின் இந்த புதுமை நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.

    ஏ.ஜி.ஆபீஸ் உயர் அதிகாரி மாற்றலாகிச் செல்லும்போது, பிரிவு உபசார விழாவில் பாலசந்தர் நடத்திய நாடகம் "மேஜர் சந்திரகாந்த்.''

    இந்த நாடகத்தை நடத்தும்போது, ஒரு புதுமையைப் புகுத்தினார். மேடைக்கு திரை கிடையாது. மூன்று பக்கமும் திறந்தவெளி! நடிகர்கள் பார்வையாளர்களுடன் அமர்ந்து இருப்பார்கள். நடிக்க வேண்டிய கட்டம் வரும்போது, கூட்டத்தில் இருந்து எழுந்து வந்து நடித்து விட்டுப் போவார்கள்!

    நாடகத்தில் மேஜர் சந்திரகாந்த் வேடத்தில் பாலசந்தர் நடித்தார்.

    இந்த நாடகம், அவருக்கு மேலும் புகழ் தேடித்தந்தது.

    ஏ.ஜி.ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே 1956 மே 13-ந்தேதி பாலசந்தருக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் ராஜம்.
    துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டினார்.

    அந்த ஆசையில் அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். அவருக்கு தொலைக்காட்சி தொடர் துணை இயக்குனர் வேலை போய்விட்டது. அதனால் என்னை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தார். ரூ.2½ லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன்.

    என்னை மிரட்டி அரை நிர்வாண கோலத்தில் படம் பிடித்தார். அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியும் என்னிடம் தொடர்ந்து பணம் கேட்டார். அடித்து துன்புறுத்தினார். அவர் மீது மணலி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆனால் ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார் வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி தொடர்ந்து மிரட்டுகிறார். என்னை அரைநிர்வாணமாக எடுத்த படங்களை அவரிடம் இருந்து போலீசார் மீட்டுத் தரவேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் யாரும் அதை நம்பாதீர்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.
    சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பிரபலமான நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்த நிலையில், மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபிராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபிராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

    சிபிராஜ்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது போலியானது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. யாரும் நம்பாதீங்க. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
    ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பாப்பிலோன் படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தங்கையின் தோழியான ஸ்வேதா ஜோயல், ஆறு ராஜாவை காதலித்து வருகிறார். முதலில் ஸ்வேதா ஜோயல் காதலை மறுக்கும் ஆறு ராஜா ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

    ஒரு நாள் ஆறு ராஜா தங்கையின் வீடியோ ஒன்று இளைஞர்களிடம் கிடைக்கிறது. இதை வைத்து ஆறு ராஜா தங்கை சௌமியாவை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதை அண்ணனுக்கு தெரியாமல் மறைத்து அவர்களிடம் பணம் கொடுக்க செல்கிறார். அப்போது சௌமியாவை அவர்கள் கடத்த எதிர்பாராத விதமாக அந்த வாகனம் விபத்தில் சிக்குகிறது.

    விமர்சனம்

    இதில் கோமா நிலைக்கு செல்லும் சௌமியா உயிர் பிழைத்தாரா? தங்கையை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்களை ஆறு ராஜா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆறு ராஜா, அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். முதல் பாதி, கதை எங்கு செல்கிறது என்று தத்தளிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கரை சேர்கிறது. பட்டாம்பூச்சியை வைத்து சொல்லும் கதை, கேட்கவும் பார்க்கவும் அருமை. 

    விமர்சனம்

    ஆறு ராஜா இயக்கத்தில் செலுத்திய கவனத்தை நடிப்பிலும் செலுத்தி இருக்கலாம். கொஞ்சம் நடிக்க தெரிந்தவர்களை நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஜோயல், தங்கையாக வரும் சௌமியா, அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    ஷ்யாம் மோகன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. அருள்செல்வன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் 'பாப்பிலோன்' பார்க்கலாம்.
    ×