என் மலர்
சினிமா செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் தாமிரா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் தாமிரா. இவர், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைச் சுழி’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குனர்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார். இதன்பின் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கியிருந்தார் தாமிரா.
அண்மையில் இயக்குனர் தாமிராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை, இயக்குனர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 53. இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு படம் ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடிகை ரஜிஷா விஜயனின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.
தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும், இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.
1972-ல் "வெள்ளி விழா'' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.
அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-
"ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, "கண்ணா நலமா'' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.
கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த "புன்னகை'' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.
"வெள்ளி விழா'' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் கூறினார்.
பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், "தெய்வத்தாய்'' முதல் "வெள்ளி விழா'' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் "அரங்கேற்ற''த்தில் தொடங்குகிறது.
இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. "ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.
"இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே "அரங்கேற்றம்.''
வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.
"களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். "கலாகேந்திரா'' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.
இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.
திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.
ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.
ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.
எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.
எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.
கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.''
இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.
"அரங்கேற்றம்'' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.
தமிழ்த்திரை உலக வரலாற்றில் "அரங்கேற்றம்'' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல

அஞ்சனா அலிகான் இயக்கத்தில் முகின் ராவ், அஞ்சனா கீர்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘வெற்றி’ படத்தின் முன்னோட்டம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார்.

மேலும் அனுபமா குமார், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். பாடத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். ஷீர்டி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இருப்பவர்களுக்கு கடந்தாண்டு பேரிடியாக அமைந்தது தான் கொரோனா லாக்டவுன். இதனால் வீட்டிலேயே பலரும் முடங்கிக் கிடந்தனர். பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், பிரபலங்கள் பலருக்கும் சொர்க்க பூமியாக அமைந்தது மாலத்தீவு.
அதிலும் அங்கு வரும் இந்திய சினிமா பிரபலங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டதால், கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் அங்கு படையெடுக்க தொடங்கினர்.

இந்நிலையில், தற்போது இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துள்ளது. நாளை முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தடை நீங்கும் வரை மாலத்தீவிற்கு செல்ல முடியாது என்பதால் திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
உடல் எடையை குறைத்தபின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை இந்துஜா, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து மெர்குரி, 60 வயது மாநிறம், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது காக்கி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்துஜா. இப்படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை இந்துஜா, உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து அவர் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. உடல் எடையை குறைத்தபின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சினிமா தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் வேகம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’, திரிஷா நடித்துள்ள ‘ராங்கி’ படங்களையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புற்றுநோயால் கடந்தாண்டு உயிரிழந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கு 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆஸ்கர் விருது, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.
அந்தவகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது.

இந்த விருது வழங்கும் விழாவில், கடந்தாண்டு உயிரிழந்த முக்கியமான நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் இர்பான் கான், இந்திய படங்களில் மட்டுமல்லாது லைப் ஆஃப் பை, ஸ்பைடர்மேன், ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய ஆடை வடிவமைப்பாளரான பாணு அதயாவிற்கும் ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகர் விஜய்யும், விவேக்கும் பத்ரி, குருவி, பிகில் உள்பட ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவேக் மரணமடைந்தபோது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றிருந்ததால், விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. இதனிடையே ‘தளபதி 65’ படப்பிடிப்பு முடிந்து நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.

இன்று காலை நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய், அங்கு விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நடிகர் விஜய்யும், விவேக்கும் ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் அந்தகன் படத்தில் பிரசாந்த், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் பிரசாந்த், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷூட்டிங் இடைவேளையில் அவர்கள் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது.
Break Moments @actorprashanth plays cricket during the shooting of @actorthiagaraja directorial #Andhagan with director #ksravikumar@iYogiBabupic.twitter.com/AzaRMdg3TK
— Sathish Maalaimalar (@SatthiEshwar) April 26, 2021