என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா பயம் காரணமாக நடிகை சமந்தா, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 

    நடிகை சமந்தா, இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார். அதன்படி, அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார். 

    சமந்தா

    இந்நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம். இதனால் அந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.
    கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் ஓடிடி-யை நாடி வருகின்றன.
    தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி திரையரங்குகளை மூடவும் உத்தரவிட்டுள்ளனர். திரையரங்குகள் திறக்க இரண்டு மாதங்கள் ஆகும் என சொல்லப்படுவதால், ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் ஓடிடி-யை நாடி உள்ளன. 

    அந்த வகையில், சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘மஹா’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மஹா படத்தின் போஸ்டர்

    நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
    ‘இந்தியன் 2’ விவகாரத்தில் நடிகர் கமல் தலையிட்டுள்ளதால் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

    இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

    ஷங்கர்

    இந்நிலையில், நடிகர் கமல் இந்தியன் 2  பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து, படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என நடிகர் கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. கமல் தலையிட்டுள்ளதால் விரைவில் ‘இந்தியன் 2’ விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.
    சினிமாவில் தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    ‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தார் மகேந்திரன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியராஜனுடன் ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில அரசு விருதை பெற்றார்.

    இதைத் தொடர்ந்து ‘பரம்பரை’, ‘கும்பகோணம் கோபாலு’, விஜய் நடிப்பில் வெளியான ‘மின்சார கண்ணா’, ரஜினியுடன் ‘படையப்பா’, அஜித்துடன் ‘முகவரி’, பிரபுதேவாவுடன் ‘நெஞ்சிருக்கும் வரை’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த மகேந்திரன் ‘விழா’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

    மகேந்திரன்

    சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தனுஷின் ‘டி43’ படத்திலும் நடிக்கிறார்.

    இந்நிலையில், சினிமாவில், தான் 28 ஆண்டுகளை நிறைவு செய்து, 29 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக நடிகர் மகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மகேந்திரன் தனது பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த மகேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
    தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

    சுதீப்

    இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி, 2.O படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் என மற்ற மொழி ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைத்துள்ள ஷங்கர், இப்படத்திற்காக கன்னட நடிகர் சுதீப்பை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    நடிகை பிரியா பவானி சங்கர், மறைந்த தனது தாத்தா குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இந்நியைில், நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா இறந்துவிட்டார். 

    மறைந்த தாத்தாவை பற்றி அவர் தனது சமூகவலைள பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது: “தாத்தா! ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி, 10 பேரப் பசங்கள்ல, 8 பேர டாக்டராக்கி, அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து, தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

    நான் தாத்தாவோட பேவரைட்லாம் இல்ல. வயதானவர் இறந்துவிட்டார் என்று கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ என்கிற ரகம் நாம. 10வது வரை பள்ளி விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத இடம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு சில குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

    பிரியா பவானி சங்கர்

    ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா அவ்வளவு ஒழுக்கம். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியைஇழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த கதவு வச்ச டிவி தான். பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த நிகழ்ச்சிகள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

    இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மருத்துவக் கல்லூரி போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார்.

    எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா தன்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு தன்னோட அம்மாக்கு வாங்கின தோடு் இது. இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார். இது விலை மதிப்பு அற்றது. அந்த முதியவரின் மதிப்பு தெரிந்தது. உங்க அம்மாவோட தோடையும், உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

    1982-ல், "அக்னி சாட்சி'' என்ற படத்தை பாலசந்தர் தயாரித்தார். கதை -வசனம் -டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். படம் சிறப்பாக அமைந்தும் சரியாக ஓடவில்லை.

    பின்னர் "அச்சமில்லை அச்சமில்லை'', "கல்யாண அகதிகள்'' ஆகிய படங்களை தயாரித்தார். அவள் ஒரு தொடர்கதை, இருகோடுகள் ஆகிய படங்களை கன்னடத்திலும், "வறுமையின் நிறம் சிவப்பு'', "அபூர்வ ராகங்கள்'' ஆகிய படங்களை இந்தியிலும் எடுத்தார்.

    1985-ல் அவர் கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்த "சிந்து பைரவி'' மகத்தான படமாக அமைந்தது.

    இதில் சிவகுமார், சுகாசினி, சுலக்ஷனா ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

    கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாவற்றிலும் சிறந்த படமாக "சிந்து பைரவி'' அமைந்தது.

    இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

    (1) சிறந்த நடிகை -சுகாசினி.

    (2) சிறந்த இசை அமைப்பாளர் -இளையராஜா.

    (3) சிறந்த பின்னணி பாடகி -சித்ரா. (பாடறியேன்... படிப்பறியேன்...'' பாட்டுக்காக.)

    சிறந்த நடிகை விருது பெற்ற சுகாசினி இதற்கு முன் பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தரின் படத்தில் நடிப்பது அதுவே முதல் படம். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைக்கக்கூடிய அளவுக்கு நடிக்க வைத்த பெருமை, பாலசந்தரையே சாரும்.

    சிந்து பைரவியின் வெற்றி பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சிந்து பைரவி படத்தை தொடக்கத்தில் பார்த்த யாருமே இது இவ்வளவு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

    விருது வாங்கும் அளவுக்கு இந்தப்படத்தை நான் கணிக்கவில்லை என்றாலும், "சிந்து'' என்ற கேரக்டரை நான் உருவாக்கியபோதே, இந்தப் பாத்திரம் ஏதோ பெரிதாக பண்ணப்போகிறது என்பது, என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.

    சில நேரங்களில் எனக்கு கேரக்டர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனைத் தரும். சில நேரங்களில் என் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எதிர்பாராமல் இன்ஸ்பிரேஷன் தருவார்கள். அந்த வகையில் சிந்துவாக நடித்த சுகாசினி, அந்த இன்ஸ்பிரேஷனை ஓரளவு அதிகமாகவே தந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையைத் தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    நடிகை சுகாசினி கூறியதாவது:-

    "தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினால், என்னையே நான் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும். இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு விருது நிச்சயமாய் கிடைக்கும் என்று என் உள் மனம் கூறிக்கொண்டே இருந்தது.

    நான் இந்த விருதைப் பெறுவதற்கு முக்கிய காரணம் பாலசந்தர்தான்.

    முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொன்னபோது, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு காட்சியையும் அவரே நடித்துக்காட்டி விளக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருந்ததால், நமக்கு அதிக சிரமம் இருக்காது என்று எண்ணி ஒப்புக்கொண்டேன்.

    அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெரிதுமë மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப்பெண்ணான நான், ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இந்த பரிசைப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன்.''

    இவ்வாறு சுகாசினி கூறினார்.

    "சிந்து பைரவி'' கதாநாயகன் சிவகுமார் கூறியிருப்பதாவது:-

    "கிட்டத்தட்ட 200 படங்கள் செய்து விட்ட எனக்கு, அகில உலகிலும் கவுரவத்தைப் பெற்று தந்த படம் "சிந்து பைரவி.''

    இசையில் ஒருத்தி மயக்குகிறாள். இல்லறத்தில் ஒருத்தி மயக்குகிறாள். நடுவிலே, "ஜே.கே.பி.'' என்றொரு அற்புதமான பாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், பாலசந்தர்.

    இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின.

    பாலசந்தர் அவர்களின் படங்களில் நடிப்பது என்பது சுகானுபவம். காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.

    கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.''

    இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தற்போது எனிமி படத்தில் நடித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார். கதாநாயகியாக மிருனாளினி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

    எனிமி படத்துக்கு பிறகு விஷாலின் 31-வது படத்தை, புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்க இருக்கிறார். இவர் குள்ளநரி கூட்டம் இயக்குனர் பாலாஜி, தேன் பட இயக்குனர் கணேஷ் விநாயக் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தையும் இயக்கி பல விருதுகளை பெற்றார்.

    தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். தற்போது பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

    ரவீனா ரவி

    சமீபத்தில் வெளியான காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் ரவீனா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகாவிற்கு பின்னணி குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் பிரபலம் மற்றும் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சித்தப்பா இரும்பு மனிதர் என்று பதிவு செய்திருக்கிறார்.
    நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் தற்போது அவருடைய மகள் கவிதா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தனது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் இதய குழாய்களில் இரண்டு அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

    அருண் பாண்டியன்

    இதனை அடுத்து அருண்பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன், ’சித்தப்பா ஒரு இரும்பு மனிதர், அவரை யாராலும் எதுவும் அசைக்க முடியாது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கண்டிப்பாக அவர் நலமுடன் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.
    அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‘எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
    சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். 

    அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதைக் கடந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    ஜீவா

    இந்நிலையில் நடிகர் ஜீவா கொரோனா தட்டுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும், வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாராட்டியும் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
    முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில் நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜும் வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.

    கே.பாக்யராஜ் மற்றும் அவர் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் கடிதம் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

    "மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.

    பொறுத்தார் பூமி ஆள்வார். ஆளும் பொறுப்பு உங்களைத் தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதை விட தங்களின் தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித்தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யபடுத்த விரும்பாது தவிர்த்தேன்.

    தற்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றின் கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன். தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப்பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்துத் தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்துவிட்டீர்கள் குறைவான விலையில். நெகிழ்வாக இருந்தது.

    பாக்யராஜ் கடிதம்

    காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு. எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அய்யாவின் அருள் உடனிருக்கும் என வாழ்த்தி, உங்கள் அன்பு பாக்யராஜ்" என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×