என் மலர்
சினிமா செய்திகள்
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்காக பிரபல நடிகர் ஒருவர் 15 கிலோ எடை குறைத்து இருக்கிறார்.
கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார்.

அதன்பின் பேசிய பாலா, தன்னால் முடிந்த உதவிகளை யாரால் செய்ய முடிகிறதோ அவனே கோடீஸ்வரன். அந்த வகையில் நானும் என்னால் முடிந்த பல நல்ல காரியங்களை செய்து வருகிறேன். இதற்கிடையில் என்னை மதித்து இந்த நிகழ்வுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. மீடியாவின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியுடன் என்னையும் இணைத்துக் கொண்டு மேலும் பல நல்ல செயல்கள் செய்ய காத்திருக்கிறேன். தொடர்ந்து பேசிய நடிகர் பாலா அடுத்து தன் அண்ணன் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் 'அண்ணாத்த' படம் குறித்து சில சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதுவரை 50க்கும் மேலான படங்களை ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தப் படத்திற்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். மேலும் நான் ஒரு ரஜினி ரசிகன், அருகில் இருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். என்ன ஒரு மனிதர் அவருக்குள் கலைஞன் பிறவியிலேயே இருக்கிறார்.

அமைதியாக அமர்ந்திருக்கிறாரே என நினைத்தால் கடந்து செல்கையிலேயே நம்மைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லி விளையாட்டுத் தனமாக குறும்பு செய்துவிட்டு செல்வார். காமெடி உணர்வு அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் தொடர்ந்து தன் திறமையால் மக்களை மகிழ்விக்கட்டும். ஒரு ரசிகனாக அதையே நான் விரும்புகிறேன்' என்றார்.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள 83 படத்தின் முன்னோட்டம்.
விளையாட்டுப் போட்டிகளை கதைக்களமாக கொண்ட படங்கள், எப்போதுமே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கருவாக வைத்து, ‘83’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணி சிறப்பாக ஆடி, இறுதி சுற்று வரை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், இந்திய அணி வீரர்களே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி மிக சிறப்பாக ஆடி கிரிக்கெட் வரலாற்றில் இடம்பெற்றது. இந்த உண்மை சம்பவங்களுடன் சில சுவாரசியமான சம்பவங்களையும் சேர்த்து, 83 படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

ரன்வீர் சிங், தீபிகா படுகோன், விஷ்ணுவர்தன், இந்தூரி, ஜீவா மற்றும் பலர் நடிக்கிறார்கள். கபீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதுடன், படத்தையும் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என சிலர் இறந்தும் போய் உள்ளனர்.
அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராதா மோகன் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள ‘மலேஷியா டூ அம்னீஷியா’ படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
‘அபியும் நானும்’, ‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் நடிகர் வைபவ்வும், நடிகை வாணி போஜனும் இணைந்து நடித்த ‘லாக்கப்’ படமும் ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, தற்போது சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்தடுத்து இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. விருதுகளையும் வாரிக்குவித்தன. குறிப்பாக நான் கடவுள் படத்திற்காக பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இந்நிலையில் இயக்குனர் பாலா டுவிட்டர் தளத்தில் இணைந்துள்ளார். அதில் தனது முதல் டுவிட்டாக, சமீபத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார் பாலா.

அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேவையற்ற வாழ்ததுரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்”.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (குறள்)”
என்று பாலா அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
— Director Bala (@IyakkunarBala) May 9, 2021
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.
டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.
தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.
முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.
ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.
முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.
அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.
ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.
பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.
1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.
1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.
பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)
வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.
1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.
இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.
சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.
"அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.
மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.
பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.
"டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.
அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை.

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம். பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும்.” இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல கன்னட நடிகரான சுதீப், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.

ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல கன்னட நடிகரான சுதீப்பும், ஆதிபுருஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் விபீஷணன் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னையர் தினமான இன்று திரைப்பிரபலங்கள் பலர் தங்களது தாயாரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாற்றுக்கிழமையை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். கடந்த நூறண்டுகளாக அன்னையர் தினக்கொண்டாட்டம் பழக்கத்தில் உள்ளது. ஆனால் அம்மாவை உண்மையிலேயே நேசிப்பவர்களுக்கு தினம், தினம் கொண்டாட்டம்தான். இன்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் சிலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

கமல்ஹாசன்
என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், என்னோடு, எப்போதுமே நானாகிய நதி மூலமே தாயாகிய ஆதாரமே.
நடிகர் சரத்குமார்
எல்லையற்ற அன்பையும் ஒப்பில்லா தியாகத்தையும் அளித்து தங்கள் குழந்தைகளையே உலகம் என நேசித்திடும் அன்னைகளுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆதரவற்ற தாய்மார்களுக்கு அவர்களது பிள்ளைகளாக இருந்து உதவுவோம்.

நடிகர் மாதவன்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள், அம்மா. இந்த உலகத்திலும், சொர்க்கத்திலும் உங்கள் அன்பு, ஆசீர்வாதத்தை விட வேறு எந்த சக்தியும் இல்லை.
நடிகை ஜனனி
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதைக் காட்டினாலும் உன்மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

நடிகை விஜயலட்சுமி
கண்ணாமூச்சி விளையாட்டுல எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிட்டேன்னு சொல்றான். எப்படி நிலன்னு கேட்டா, உனக்கும் எனக்கும் இதயத்துக்கும் இதயத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு அம்மா, நீங்க எங்க போனாலும் உன்னைக் கண்டுபிடிச்சிடுவேன்னு சொல்றான். தாய்மை என்பது பேரின்பம். அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
இயக்குனர் சேரன்
என் அன்னைக்கும் அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

சிபிராஜ்
அம்மா என்பவர் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்ல, அந்த குழந்தையின் முதல் ஆசிரியை, நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
தேவிஸ்ரீ பிரசாத்
உலகின் சிறந்த அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒவ்வொரு நிமிடமும் தன்னலமின்றி, அயராது, உணர்ச்சியுடன், பாசமாக, எங்கள் கனவுகள் அனைத்தும் உண்மையாக வர அவர்களுக்கு நாம் என்ன செய்தோம். லவ் யு அம்மா.

வனிதா
தங்கள் பிள்ளைகளை மட்டுமின்றி அனைத்து பிள்ளைகளையும் தன் சொந்த குழந்தையாகவே பார்க்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா
இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற என தான் இசையமைத்த பாடலின் வரிகளை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் யுவன்.

மாளவிகா மோகனன்
அனைத்து தாய்மார்களுக்கும், என் அழகான அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். பெரும்பாலும் பெண்கள் அப்பா செல்லமாக இருப்பார்கள், ஆனால் நானோ முழுக்க முழுக்க அம்மா செல்லம் என தெரிவித்துள்ளார்.