என் மலர்
சினிமா

குருதி ஆட்டம் படத்தின் போஸ்டர்
குருதி ஆட்டம்
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த டைரக்டர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்து டைரக்டு செய்திருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்.’ இதில் அதர்வா முரளி-பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் அழுத்தமான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது:- “இது, அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட 2 தாதாக்களின் கதை. மதுரையை கதைக்களமாக கொண்ட படம். அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் திரைக்கதை.

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய 4 பேர் இடையே நடை பெறும் சம்பவங்களே படம். பேபி திவ்ய தர்சினி, ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறாள். முருகானந்தம் தயாரித்து இருக்கிறார். ‘எட்டு தோட்டாக்கள்’ போல், இந்த படமும் ஒரு புதிய அனுபவத்தை தரும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






