என் மலர்
சினிமா செய்திகள்
தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா, தனது வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் நடிகையாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டும் மிகவும் பிரபலமானார். தற்போது படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில் வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பண மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவருடன் மகளும் பண மாலை அணிந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் ரகுமான் வீட்டில் சோகமான சம்பவம் நடந்துள்ளது.
80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது ஹீரோவாக நடிப்பதை விட, தரமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் மட்டுமே கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.


ரகுமான் தாயார்
இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி உயிரிழந்துள்ளார். 84 வயதாகும் ரகுமானின் தாயார் இன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் காலமானார். இவரது இறுதி சடங்கு நாளை காலை கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ஷங்கர், லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து இருக்கிறார்.
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர், தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


படக்குழுவினருடன் ஷங்கர்
அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் ஷங்கர் திடீர் விசிட் அடித்து இருக்கிறார். படப்பிடிப்பை பார்த்த ஷங்கர், அதன்பின் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பயணம் என்ற வீடியோ பாடலை ஜூலை 17 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை அப்டேட்டுக்காக ஓராண்டுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை இரு தினங்களுக்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த மோஷன் போஸ்டருக்கு ரசிகர்களிடமிருந்து இரு விதமான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் மோஷன் போஸ்டர், யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதைத் தொடர்ந்து அதற்காக சில போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

அவற்றைப் பார்த்த ரசிகர்கள் இந்த போஸ்டர்களை முதல் பார்வை போஸ்டர்களாக வெளியிட்டிருக்கக் கூடாதா என ஆதங்கப்பட்டுள்ளனர். பைக்கில் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் அஜித்தைப் பார்க்க ஹாலிவுட் நடிகரைப் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல் பார்வை போஸ்டரை விட இந்த போஸ்டர் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி, சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக பிரபல இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இவர் பெயரில் சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு தொடங்கி சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி பணம் கேட்டு வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செ.ஹரி உத்ரா இயக்கத்தில் புதுமுகம் சரத், ஐரா நடிப்பில் உருவாகி வரும் ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் முன்னோட்டம்.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர், செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6, வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது? என்பதே திரைக்கதை. 90 சதவீத சம்பவங்கள் இரவில் நடைபெறுகின்றன.

வாத்தியார் கால்பந்தாட்ட குழு படக்குழுவினர்
கதாநாயகன் புதுமுகம் சரத். கதாநாயகி ஐரா. சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜ கால்பந்து வீரர்கள் சிலர், படத்தில் நடிக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன.
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன. இவற்றுள் மாநாடு, பொம்மை போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அந்த வெப் தொடரை ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.

ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே.சூர்யா
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா - ஆண்ட்ரூ லூயிஸ் கூட்டணியில் உருவாகும் இந்த வெப் தொடரை ‘விக்ரம் வேதா’ பட பிரபலம் புஷ்கர் - காயத்ரி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘ஏலே’ படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘டான்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

டான் படத்தின் போஸ்டர்
டான் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பை கோயம்புத்தூரில் நடத்தி முடித்த படக்குழு, 2-ம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருந்த சமயத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற 17-ந் தேதி சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
அதன்படி சேகர் கம்முலா இயக்கும் தெலுங்கு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது ஒருபுறம் இருக்க, தமிழிலும் 5 படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

இளன்
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ், புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இளன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருந்தார்கள்.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மண்டேலா’. இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் படத்தில் சொல்லி இருந்தார்கள். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் வெளியானதால் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை வாழ்த்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

மண்டேலா படக்குழு
இந்நிலையில், மண்டேலா படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதில் யோகி பாபு, நடிகை ஷீலா, இயக்குனர் மடோன் அஷ்வின் உள்பட படத்தில் பணியாற்றியவர்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நன்றி தெரிவித்துள்ளார் யோகிபாபு.
100 days mandela thankyuo pic.twitter.com/TutSiXoTzW
— Yogi Babu (@iYogiBabu) July 13, 2021
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இது, விஷ்ணு விஷாலின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.
தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதன்படி ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடித்திருந்தார். ராட்சசுடு என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், ராட்சசுடு படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா, இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தில் முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘ராட்சசுடு 2’ படத்தின் போஸ்டர்
சமீபத்தில் இயக்குனர் ரமேஷ் வர்மா, சென்னை வந்து விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். அது ராட்சசுடு 2-ம் பாகத்துக்கான கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால் இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம்வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






