என் மலர்
இது புதுசு
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக செல்டோஸ் எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் செல்டோஸ் கார் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய செல்டோஸ் இ.வி. கார் SP2 EV எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. செல்டோஸ் கார் இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலும் கொரியாவில் உள்ள குவாஞ்சு ஆலையில் உருவாக்கப்படுகிறது. செல்டோஸ் இ.வி. கார் பாடி பேனல்கள், உள்புறங்கள் செல்டோஸ் மாடலில் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது.

எனினும், ஸ்டான்டர்டு எஸ்.யு.வி. மாடலுடன் புதிய இ.வி. காரை வித்தியாசப்படுத்த சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பார்க்க கியா நிரோ மற்றும் சோல் இ.வி. மாடல்களை போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய செல்டோஸ் இ.வி. காரில் கியா சோல் இ.வி. மற்றும் ஹூண்டாய் கோனா இ.வி. மாடல்களில் உள்ள எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 204 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார், 64 KwH பேட்டரி பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
செல்டோஸ் எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய செல்டோஸ் இ.வி. கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரின் முதல் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது கார்னிவல் எம்.பி.வி. காருக்கான முதல் டீசரை வெளியிட்டுள்ளது. புதிய கியா கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் ஜனவரி மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கியா கார்னிவல் மாடலில் உள்நாட்டிற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய கார்னிவல் கார் பாகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள அனந்தபூர் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

புதிய காரின் விலையை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயிக்க கியா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இதன் விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா கார்னிவல் கார் 5115எம்.எம். நீளமாகவும், 1985 எம்.எம். அகலம், 1740 எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3060 எம்.எம். அளவில் இருக்கிறது. கியா கார்னிவல் எம்.பி.வி. கார் ஆறு, ஏழு அல்லது எட்டு பேர் பயணிக்கக்கூடிய ஆப்ஷன்களில் கிடைக்கும்.
புதிய கியா கார்னிவல் கார் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 202 பி.ஹெச்.பி. பவர் 441 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படலாம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய ஆரா காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் செடான் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் ஆரா கார் இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் ஆரா சப் காம்பேக்ட் கார் 4 மீட்டர் அளவில் உருவாகி இருக்கிறது.
புதிய ஹூணாடாய் ஆரா கார் புதுவித வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது அதிநவீன வடிவமைப்பு மற்றம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. புதிய ஆரா செடான் கார் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இந்த கார் பார்க்க எக்ஸ்சென்ட் போன்றே காட்சியளிக்கிறது.
புதிய காரின் பின்புறம் அழகிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், பிளாக்=அவுட் சி பில்லர் வழங்கப்பட்டுள்ளது. இதன் உள்புறம் பற்றி ஹூண்டாய் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் டூயல் டோன் டேஷ்போர்டு, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆரா காரில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் முறையே 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் மற்றும் 120 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவைதவிர 1.2 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் என்ஜின் 75 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சான் இ.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்சான் இ.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
டாடா நெக்சான் இ.வி. காரின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கும் நிலையில், இதன் முன்பதிவுகளை டாடா மோட்டார்ஸ் துவங்கியுள்ளது. புதிய நெக்சான் இ.வி. காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரின் விலை வெளியீட்டின் போது அறிவிக்கப்படும்.
எனினும், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் டாடா நெக்சான் இ.வி. காரின் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்சான் இ.வி. காரில் நிரந்தர காந்தம் கொண்ட ஏ.சி. மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி IP67 தரச்சான்று பெற்று இருப்பதோடு, லிக்விட் கூலிங் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பேட்டரி பேக் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகும்.
டாடா நெக்சான் இ.வி. காரில் 30.2 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 245 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும்.
இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டு சார்ஜ் செய்யும் போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். வீட்டில் உள்ள சார்ஜர் பயன்படுத்தும் போது முழுமையாக சார்ஜ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங்கில் ஒரு நிமிடம் சார்ஜ் செய்யும் போது நான்கு கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் 50 சதவீதம் சார்ஜ் கொண்டு 150 கீலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் காரின் கேப்ன் வரைபடம் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது விஷன் ஐ.என். கான்செப்ட் காரின் முதல் உட்புற வரைபடங்களை வெளியிட்டுள்ளது. புதிய கான்செப்ட் கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் வாகனம் ஆகும். ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கார் 2021 ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

காரின் டேஷ்போர்டு அகலமாகவும், பல்வேறு நிறங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டின் ஓரங்களில் ஏர்-கான் வென்ட் இடம்பெற்றுள்ளது. இதன் மத்தியில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் விர்ச்சுவல் காக்பிட் மற்றும் புதிய க்ரிஸ்டலைன் எலிமென்ட் உடன் வழங்கப்படுகிறது.
கேபினில் 3-ஸ்போக் மல்டி-ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல் பட்டன்களுடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கோடா விஷன் ஐ.என். கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல் 4.26 மீட்டர் நீலமாக இருக்கும் என ஸ்கோடா ஏற்கனவே அறிவித்து இருக்கிறது. புதிய விஷன் ஐ.என். கான்செப்ட் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் செடான் மாடல் ஆரா காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஆரா காம்பேக்ட் செடான் காரின் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டுள்ளது. புதிய ஹூண்டாய் ஆரா கார் அந்நிறுவனத்தின் எக்ஸ் சென்ட் மாடலுக்கு மாற்றாக உருவாகி வருகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரைபடங்களின் படி ஹூண்டாய் ஆரா காம்பேக்ட் செடான் மாடலில் அதிரடியான ஸ்போர்ட் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது.

காரின் பக்கவாட்டில் எளிமையான வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் சி பில்லர், ஃபுளோட்டிங் ரூஃப் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறத்தில் புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ஸ்லோப்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பார்க்க கூப் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.
டேஷ்போர்டு டூயல் டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இது நியோஸ் காரில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. புதிய ஹூண்டாய் ஆரா காரில் கியர் லீவர் சென்டர் கன்சோலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கரோக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது புதிய கரோக் மாடல் கார் இந்தியாவில் ஏப்ரல் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா கரோக் மாடல் பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பில் செய்யப்படுகிறது. புதிய கரோக் மாடலில் 1.0 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு என்ஜின்களும் முறையே 113 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க், மற்றும் 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. புதிய ஸ்கோடா கரோக் மாடல் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய கார் எம்.ஜி. ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
இதுதவிர ஸ்கோடா நிறுவனம் புத்தம் புதிய ஆக்டேவியா ஆர்.எஸ்.245 மாடலை 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் மொத்தமாக 200 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 39.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் பி.எஸ்.6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய வால்வோ காரில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன், 8 ஸ்பீடு கியர்டிரானிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்.சி.40 மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆடம்பர காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் புதிய மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்.சி.40 மாடலில் 12.3 இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஹார்மன் கார்டன் 14 ஸ்பீக்கர் 600 வாட் சரவுண்ட் சிஸ்டம், டேஷ் மவுன்ட் செய்யப்பட்ட வூஃபர், பானரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட்போன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9 இன்ச் MID தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ரேபிட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய 2020 ரேபிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
2020 ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB-AO-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.
புகிய 2020 ஸ்கோடா ரேபிட் காரின் முன்புறம் புதி ஹெக்சாகோனல் கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், பின்புறம் புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

முன்பற பம்ப்பர்களும் முந்தைய மாடல்களை விட பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் காரின் வெளிப்புறத்தில் லிப் ஸ்பாயிலர், கருப்பு நிற ORVMகள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது. உள்புறம் முற்றிலும் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் புதிய உபகரணங்களை கொண்டிருக்கிறது.
அதன்படி காரில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று ஸ்போக் கொண்ட ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் புதிய ஸ்கோடா ரேபிட் கார்: 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், சக்திவாய்ந்த 1.4 TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 88.7 பி.ஹெச்.பி. பவர், 108.4 பி.ஹெச்.பி. பவர் என இருவித டியூனிங்கிலும், சக்திவாய்ந்த TSI என்ஜின் 123.2 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எட்டாம் தலைமுறை ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஜி.எல்.ஏ. காரில் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜி.எல்.ஏ. காரில் அதிநவீன டிரைவிங் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு அதிக வசதிகளை வழங்குவதோடு, இந்த பிரிவு கார்களில் அதிநவீன பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.
2020 ஜி.எல்.ஏ. காரில் நிரந்தரமாக 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை பொருத்திக் கொள்ள முடியும். இதில் கார்பன் ஃபைபர் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 1000 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆல் வீல் டிரைவ் அம்சம் கொண்டு ஓட்டுனரால் டைனமிக் செலக்ட் அம்சத்தை பயன்படுத்தி 4MATIC திறனை இயக்க முடியும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வருகிறது. இது முந்தைய வெர்ஷன்களை விட அதிக திறன் கொண்டிருக்கிறது. இதே கார் பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் உருவாக்கப்பட்டு வருவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய தலைமுறை ஜி.எல்.ஏ. காரில் 1.33 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும்.
ஹோன்டா நிறுவனத்தின் சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 சிட்டி பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஹோண்டா நிறுவனம் தனது பெட்ரோல் மாடல்களை மட்டுமே பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது. எதிர்காலத்தில் டீசல் என்ஜின்களும் பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய காரில் ஹோண்டா நிறுவனம் டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் டன்-பை-டன் நேவிகேஷன், நேரலை போக்குவரத்து நெரிசல் தகவல்கள், வாய்ஸ் கமாண்ட், ப்ளூடூத் இணைப்பில் அலைபேசி வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இதன் அறிமுக நிகழ்வு டிசம்பர் 17 இல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டாடா நெக்சான் இ.வி. கார் அறிமுகம் இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதன் விற்பனை நான்காவது காலாண்டில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் நெக்சான் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என இதுவரை வெளியான டீசர்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொனெட் மற்றும் முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மெல்லிய கிரில், டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லைட் யூனிட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் கார் அக்டோபர் 2020 முதல் அமலாக இருக்கும் புதிய பாதசாரி பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
புதிய காரில் அலாய் வீல் வடிவமைப்புகள், பின்புற ஸ்டைலிங் போன்றவை தற்சமயம் விற்பனையாகும் காரை விட வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சான் இ.வி. கார் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையகங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய அளவு திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.






