search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஸ்கோடா ரேபிட்
    X
    2020 ஸ்கோடா ரேபிட்

    2020 ஸ்கோடா ரேபிட் அறிமுகம்

    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 ரேபிட் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஸ்கோடா நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய 2020 ரேபிட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    2020 ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB-AO-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது.

    புகிய 2020 ஸ்கோடா ரேபிட் காரின் முன்புறம் புதி ஹெக்சாகோனல் கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர், பின்புறம் புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2020 ஸ்கோடா ரேபிட்

    முன்பற பம்ப்பர்களும் முந்தைய மாடல்களை விட பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் காரின் வெளிப்புறத்தில் லிப் ஸ்பாயிலர், கருப்பு நிற ORVMகள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது. உள்புறம் முற்றிலும் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் புதிய உபகரணங்களை கொண்டிருக்கிறது.

    அதன்படி காரில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று ஸ்போக் கொண்ட ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    ரஷ்யாவில் புதிய ஸ்கோடா ரேபிட் கார்: 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின், சக்திவாய்ந்த 1.4 TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 88.7 பி.ஹெச்.பி. பவர், 108.4 பி.ஹெச்.பி. பவர் என இருவித டியூனிங்கிலும், சக்திவாய்ந்த TSI என்ஜின் 123.2 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×