என் மலர்tooltip icon

    பைக்

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடலை வினியோகம் செய்ய துவங்கியது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் பிளாக்ஷிப் மாடல் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பிளாக்ஷிப் மாடல் ஹோண்டா பிங்விங் விற்பனையகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகின்றன.

     2021 ஹோண்டா கோல்டு விங் டூர்

    2021 ஹோண்டா கோல்டு விங் டூர் மாடல் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்பனை துவங்கிய 24 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. 2021 கோல்டு விங் டூர் மாடல் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

    புதிய ஹோண்டா கோல்டு விங் டூர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 37,20,342 என்றும் DCT வேரியண்ட் விலை ரூ. 39,16,055 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆர்வி400 மாடல் முன்பதிவு மீண்டும் நடைபெற இருக்கிறது.

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஆர்வி 400 மற்றும் ஆர்வி300 மாடல்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. 

    எனினும், முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அமோக வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்டது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     ரெவோல்ட் ஆர்வி400

    இந்தியாவில் பேம் 2 திட்டத்தில் கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டதால் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 28,200 குறைந்தது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 90,799, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. 

    ரெவோல்ட் ஆர்வி400 மாடலில் 3.24kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 3kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    பஜாஜ் டாமினர் 400 இந்திய சந்தையின் டூரிங் மோட்டார்சைக்கிள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின்படி டாமினர் 400 மற்றொரு வேரியண்ட் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. டாமினர் 400 புது வேரியண்ட் டூரிங் சார்ந்த பல அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     பஜாஜ் டாமினர் 400

    பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் இந்த மாடல் புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் நக்கிள் கார்டுகள் உள்ளன. தற்போது இந்த மாடலின் முன்புற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த மாடலில் மேலும் சில அக்சஸரீக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

    இந்தியாவில் பண்டிகை காலம் சில மாதங்களில் தொடங்க இருப்பதால், விரைவில் டாமினர் 400 டூரிங் எடிஷன் வெளியாகும் என தெரிகிறது. இந்த மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் டாமினர் 400 ஸ்டான்டர்டு எடிஷனை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. ஒவ்வொரு மாடல், வேரியண்ட் மற்றும் நிறத்திற்கு ஏற்ப இம்முறை ரூ. 4,470 துவங்கி அதிகபட்சம் ரூ. 8,405 வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.  

    புதிய விலை விவரம்

    புல்லட் 350 KS - பிளாக் சில்வர், ஆனிக்ஸ் பிளாக் ரூ. 1,58,754
    புல்லட் 350 KS - பிளாக் ரூ. 1,65,754
    புல்லட் 350 ES - ஜெட் பிளாக், ரீகல் ரெட் மற்றும் ராயல் புளூ ரூ. 1,82,190

    Meteor 350 பயர்ஃபால் (ரெட், எல்லோ) ரூ. 1,92,109
    Meteor 350 ஸ்டெல்லார் (புளூ, ரெட், பிளாக்) ரூ. 1,98,099
    Meteor 350 சூப்பர்நோவா (பிரவுன், புளூ) ரூ. 2,08,084

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஹிமாலயன் கிரானைட் பிளாக், ஃபைன் கிரீன் ரூ. 2,13,273
    ஹிமாலயன் மிரேஜ் சில்வர், கிராவெல் கிரே ரூ. 2,05,314
    ஹிமாலயன் லேக் புளூ, ராக் ரெட் ரூ. 2,09,529

    இன்டர்செப்டார் 650 மார்க் 2 க்ரோம் ரூ. 3,03,620
    இன்டர்செப்டார் 650 பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப், டவுன்-டவுன் டிராக் ரூ. 2,89,805
    இன்டர்செப்டார் 650 ஆரஞ்சு கிரஷ், வென்ட்யூரா புளூ, கேன்யான் ரெட் ரூ. 2,81,518

    கான்டினென்டல் GT650 மிஸ்டர் க்ளீன் ரூ. 3,20,177
    கான்டினென்டல் GT650 ப்ரிடிஷ் ரேசிங் கிரீன், ராக்கர் ரெட் ரூ. 2,98,079
    கான்டினென்டல் GT650 டக்ஸ் டீலக்ஸ், வென்ட்யூரா ஸ்டாம் ரூ. 3,06,368

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பி.எஸ். 6 ரக R 1250 GS மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரம்:

    பி.எம்.டபிள்யூ. R 1250 GS ப்ரோ ரூ. 20,45,000

    பி.எம்.டபிள்யூ. R 1250 GS அட்வென்ச்சர் ப்ரோ ரூ. 22,40,000

     பி.எம்.டபிள்யூ. R 1250 GS

    புதிய பி.எம்.டபிள்யூ. மோட்டார்சைக்கிள் மாடல்கள் சி.பி.யு. (Completely Built-up Units) முறையில் முழுமையாக உருவாக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன. பி.எஸ். 6 ரக R 1250 GS மாடலில் 1254சிசி, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட்-ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலில் அசிமெட்ரிக் ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன், எல்.இ.டி. லைட்டிங், அடாப்டிவ் ஹெட்லைட், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் TFT கலர் டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல், யு.எஸ்.பி. சார்ஜிங் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, அவெஞ்சர் 220 குரூயிஸ் மற்றும் 160 ஸ்டிரீட் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வுக்கு பின் இரு மாடல்கள் விலை முறையே ரூ. 1,31,046 மற்றும் ரூ. 1,07,309 என மாறி இருக்கிறது. முன்னதாக இவற்றின் விலை ரூ. 1,26,995 மற்றும் ரூ. 1,03,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர ஜனவரி மாதமும் இரு மாடல்கள் விலையை பஜாஜ் ஆட்டோ உயர்த்தியது.

     பஜாஜ் அவெஞ்சர்

    விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அவெஞ்சர் 220 குரூயிஸ் மாடலில் 220சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 18.76 பி.ஹெச்.பி. பவர், 17.55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர்-கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. முன்னதாக பஜாஜ் ஆட்டோ டாமினர் சீரிஸ் விலையை மாற்றி அமைத்தது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 மாடலின் ரேஸ் XP மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புது 125சிசி மாடல் விலை ரூ. 83,275, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலில் ரேசிங் சார்ந்த, மூன்று நிறங்கள் அடங்கிய தீம் மற்றும் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் சிவப்பு நிறத்தால் ஆன ஸ்போர்ட் வீல்கள் உள்ளன.

     டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP

    டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடலில் மேம்பட்ட Smartxonnect கனெக்டிவிட்டி மற்றும் இரண்டு ரைட் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இதில் உள்ள Smartxonnect வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதுதவிர மோட்களை மாற்றுவது, கன்சோல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்வது, டு நாட் டிஸ்டர்ப் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    என்டார்க் 125 புது வேரியண்டிலும் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 10 பி.ஹெச்.பி. பவர், 10.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ரேஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்கூட்டர் மணிக்கு 98 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் டாமினர் 250 மற்றும் 400 மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மாற்றி உள்ளது. அதன்படி டாமினர் 250 மாடல் விலை ரூ. 16,800 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 1,54,176 என மாறி உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ. 1,70,976 என இருந்தது. 

     பஜாஜ் டாமினர் 250

    டாமினர் 400 மாடலின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 2,11,572 ஆகும். முன்னதாக இதன் விலை ரூ. 2,03,017 இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது டாமினர் 400 விலை ரூ. 8555 உயர்ந்து இருக்கிறது. விலை உயர்வு தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா FZ-25 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டாமினர் 400 மாடல் ராயல் என்பீல்டு Meteor 350, ஹோண்டா CB350 RS மற்றும் பெனலி இம்பீரியல் 400 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா இருசக்கர வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் மட்டும் 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021 ஜூன் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2.34 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்நிறுவனம் 2.10 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

     ஹோண்டா மோட்டார்சைக்கிள்

    கடந்த மாதம் 2.12 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. ஏற்றுமதியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 168 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 21,583 யூனிட்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

    ஒட்டுமொத்த விற்பனையில் ஆக்டிவா 6ஜி மற்றும் ஷைன் மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இவை தவிர ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 
    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிக்சர் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்களின் விலை ரூ. 3500 வரை உயர்ந்துள்ளது.

    புதிய விலை விவரம்

    சுசுகி ஜிக்சர் SF: ரூ. 1,20,469
    சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,30,971
    சுசுகி ஜிக்சர் 250: ரூ. 1,72,872
    சுசுகி ஜிக்சர் SF 250: ரூ. 1,83,571
    சுசுகி ஜிக்சர் SF 250 மோட்டோஜிபி: ரூ. 1,84,373

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     சுசுகி மோட்டார்சைக்கிள்


    இந்த ஆண்டு மட்டும் சுசுகி இருசக்கர வாகனங்கள் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் ஜிக்சர் மாடல்கள் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. 

    சில தினங்களுக்கு முன் சுசுகி நிறுவனம் தனது 2021 ஹயபுசா இரண்டாம் கட்ட யூனிட்களுக்கான முன்பதிவை துவங்கியது. ஹயபுசா 2021 மாடல்களின் முதல் விற்பனையில் 101 யூனிட்களும் விற்றுத்தீர்ந்தன. இவற்றின் வினியோகமும் துவங்கி நடைபெற்று வருகிறது.  
    சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ஹயபுசா மாடலின் முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக ஹயபுசா மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. தற்போதைய முன்பதிவு ஹயபுசா பிஎஸ்6 இரண்டாம் கட்ட யூனிட்களுக்கானவை ஆகும். புது ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். 

    2021 ஹயபுசா மாடல்களின் முதற்கட்ட யூனிட்கள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. முதற்கட்டமாக 101 யூனிட்கள் விற்பனைக்கு வந்தது. 101 யூனிட்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பின்புற இருக்கைக்கான கவுல் இலவசமாக வழங்கப்பட்டது. பின்புற கவுல் கொண்டு மோட்டார்சைக்கிளை ஒற்றை இருக்கை கொண்ட மாடலாக மாற்ற முடியும்.  

     2021 சுசுகி ஹயபுசா

    இந்தியாவில் புதிய சுசுகி ஹயபுசா மாடல் துவக்க விலை ரூ. 16.40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது முந்தைய மாடலை விட ரூ. 2.65 லட்சம் அதிகம் ஆகும். ஹயபுசா பிஎஸ்6 மாடலில் புல் எல்இடி லைட்டிங், எல்சிடி ஸ்கிரீன், முற்றிலும் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மற்றொரு நகரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனையை பூனேவில் துவங்கி உள்ளது. இதன் விலை ரூ. 1,10,898 ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிஎஸ் ஐ கியூப் ஸ்கூட்டர் டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை நாட்டின் 20 நகரங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இந்த ஆண்டு மே மாதத்தில் அறிவித்தது. செயல்திறன் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்ரோல் திறன் கொண்ட 125சிசி வாகனங்களுக்கு இணையாக உள்ளது. 

    டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் உள்ள 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் 140 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
    ×