
டெஸ்லா போன்றே ஓலா எலெக்ட்ரிக் தனது ஸ்கூட்டர் விற்பனையை நேரடியாக ஆன்லைனில் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனையகம் செல்வீர்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்தவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் விற்பனையே சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருக்கின்றனர். முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும்.
முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.