என் மலர்tooltip icon

    பைக்

    • 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டது.
    • ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிகவும் பிரபல ஸ்கூட்டர் - ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆக்டிவா 6ஜி பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிரபல ஸ்கூட்டர் பெயரில் இருந்து 6ஜி மட்டும் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

    பெயர் மட்டுமின்றி 6ஜி பிராண்டிங் கொண்டிருந்த புகைப்படங்களும் மாற்றப்பட்டு இருக்கிறது. 2015 ஆண்டு ஹோண்டா அறிமுகம் செய்த ஆக்டிவா மாடல் ஆக்டிவா 3ஜி எனும் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின் இதைத் தொடர்ந்து அறிமுகமான ஸ்கூட்டர்கள் ஆக்டிவா பெயருடன் 4ஜி, 5ஜி மற்றும் 6ஜி பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பெயரில் இருந்து 6ஜி நீக்கப்பட்டு இருக்கிறது.

    பிரபல ஸ்கூட்டர் மாடலின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என்று கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா இ எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    • இந்தியாவில் 25 நகரங்களில் புதிய மேட்டர் ஏரா மாடல் முன்பதிவு நடைபெற இருக்கிறது.
    • மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மாடலில் 5 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆமதாபாத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் மேட்டர் மோட்டார். இந்திய சந்தையில் கியர் கொண்ட முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஏரா எனும் பெயரில் மேட்டர் மோட்டார் வெளியிட இருக்கிறது. புதிய மேட்டர் ஏரா மாடலுக்கான முன்பதிவு மே 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    முதற்கட்டமாக இந்தியாவின் 25 நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மேட்டர் ஏரா மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் மும்பை, பூனே, டெல்லி என்சிஆர், சென்னை, ஐதராபாத், புவனேஷ்வர், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்கள் அடங்கும்.

     

    மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் 5 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சம் 10.5 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்தால் மேட்டர் ஏரா எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 125 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மேட்டர் ஏரா மாடலுக்கான முன்பதிவு மேட்டர் மோட்டார் வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் என்று வெவ்வேறு ஆன்லைன் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. ஏரா 5000 மற்றும் ஏரா 5000 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
    • கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது.

    கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது 390 அட்வென்ச்சர் மாடலின் புதிய வேரியண்ட்கள்- குறைந்தவிலை X வெர்ஷன் மற்றும் லோ-சீட் V ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது. தற்போது கேடிஎம் நிறுவனம் ஆஃப்-ரோடு சார்ந்த கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் ஸ்போக் வீல் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சர்வதேச சந்தையை போன்றே கேடிஎம் 390 அட்வென்ச்சர் SW மாடல், புதிய ஆஃப் ரோடு மாடல் 390 அட்வென்ச்சர் ரேலி என்ற பெயரில் தான் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது.

     

    இந்த மாடலின் விற்பனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்திலோ துவங்கும் என்று தெரிகிறது. புதிய மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஸ்போக் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் ரேலி மாடலில் 373 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    • சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.
    • வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவித்து இருக்கிறது. புதிய சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.

    வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது. எனினும், வினியோக தேதி இன்னமும் சரியாக அறிவிக்கப்படாமல் உள்ளது. முன்னதாக 2021 ஆண்டு ப்ரோடோடைப் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் மாடலில் 4.5 மற்றும் 4.8 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளன.

     

    பின் இந்த ஸ்கூட்டரில் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என்று சிம்பில் எனர்ஜி அறிவித்தது. அதன்படி சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    இதன் ப்ரோடோடைப் வெர்ஷனில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வைபை, கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, நான்கு ரைடிங் மோட்கள் என்று ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் மோனோஷாக், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருந்தது. இதே அம்சங்கள் அதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் டியூபுலர் ஃபிரேம், 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
    • இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சீனாவை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான கியூஜெ மோட்டார் உடன் இணைந்து சர்வதேச சந்தையில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டது. இந்த கூட்டணியின் அங்கமாக X500 பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் ஆட்டோ ஷாங்காய் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஹார்லி டேவிட்சன் X500 மாடல் பெனலி லியோன்சினோ 500 மாடல் உருவாகி இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் X500 மாடலும் டியூபுலர் ஃபிரேம் மற்றும் 500சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 47 ஹெச்பி பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

     

    ஹார்டுவர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், டூயல் டிஸ்க் பிரேக், இருபுறமும் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

    இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி அமைத்து இருப்பதால், புதிய X500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது. எனினும், ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • ஹீரோ மோட்டோகார்ப் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்துகிறது.
    • விடா V1 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விடா V1 பிளஸ் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்றும் ப்ரோ வெர்ஷன் விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என்றும் மாறி இருக்கிறது. முன்னதாக விடா V1 ப்ரோ மாடல் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாடு முழுக்க விடா V1 சீரிஸ் விலை ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி குஜராத் மாநிலத்தில் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 99 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநிலம் சார்பில் வழங்கப்படும் மாணியங்களும் அடங்கும்.

     

    விலைகுறைப்பு மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி நாடு முழுக்க 100 நகரங்களில் விடா V1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெங்களூரு, ஜெய்பூர் மற்றும் டெல்லியை தொடர்ந்து அதிக நகரங்களில் விடா V1 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி பூனே, ஆமதாபாத், நாக்பூர், நாசிக், ஐதராபாத், சென்னை, கோழிக்கோடு மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் விடா V1 சீரிஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.

    • ஒலா S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருகிறது.
    • ஒலா நிறுவனம் ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜரை வாங்க தனியாக பணம் செலுத்திய தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    சார்ஜருக்கு தனியாக கட்டணம் நிர்ணயிக்கும் ஒலா எலெக்ட்ரிக் முடிவுக்கு ARAI நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. எனினும், தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பதால், ARAI நடவடிக்கை எடுக்கும் முடிவை ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சில எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சார்ஜர் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்குவதற்காக தனியே கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இவ்வாறு செய்வதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ஓரளவு குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக சில நிறுவனங்கள் அத்தியாவசிய பாகங்களான சார்ஜர்களுக்கும் தனியே கட்டணம் வசூலித்தன. இதன் மூலம் நிறுவனங்கள் ஒட்டுமொத்த விலை தவிர லாபத்தை அதிகப்படுத்த முடியும். 

    • புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலில் அழகு சார்ந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
    • செயல்திறனை பொருத்தவரை இந்த மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்றே தெரிகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முற்றிலும் புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளின் விளம்பர படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    புகைப்படங்களின் படி புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலில் அழகு சார்ந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பைக்கின் முன்புறம் முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்ப்லிட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மேல்புறத்தில் ஹை பீம், கீழ்புறம் லோ பீம் உள்ளது. இத்துடன் H வடிவம் கொண்ட டிஆர்எல் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் உள்ள விண்ட்ஸ்கிரீன் முழுமையாக பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள எரிபொருள் டேன்க் கவர் ரிடிசைன் செய்யப்பட்டு, ஸ்போர்ட்ஸ் சார்ந்த ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய மேட் ஃபினிஷ் பெயிண்ட் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை இந்த மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்றே தெரிகிறது. இந்த யூனிட் 8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலின் விற்பனை ஏற்கனவே வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய OBD 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதால், இதன் இந்திய வெளியீடு தாமதமாகி இருக்கிறது. அனைத்து புதிய மோட்டார்சைக்கிள்களும் இந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பதால், ஹீரோ நிறுவனம் புதிய பேஷன் எக்ஸ்ப்ரோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

    • புதிய பல்சர் N160 மாடல் E20 ரக எரிபொருளில் இயங்கும் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • இந்த மாடலில் 164.82 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற வாகனங்களை இந்திய சந்தையில் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பல்சர் N160 மாடல் புதிய புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2023 பஜாஜ் பல்சர் N160 OBD2 மாடல் விற்பனை மையங்களுக்கு வரத்துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் N160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 645, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 பல்சர் N160 மாடலில் புதிய OBD2 ஹார்டுவேர் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் உள்ள ஆன்போர்டு சிஸ்டம், எமிஷன்களை ரியல்டைமில் டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடல் E20 ரக எரிபொருளில் இயங்கும் என்ஜின் கொண்டிருக்கிறது. இவை தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     

    அந்த வகையில் புதிய பஜாஜ் பல்சர் N160 மாடலில் 164.82 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15.68 ஹெச்பி பவர், 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாடலின் ஸ்டைலிங்கில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    அந்த வகையில், இந்த மாடல் சிங்கில் பாட் ப்ரோஜெக்டர் ஸ்டைல் ஹெட்லைட், டுவின் டிஆர்எல்கள், பாடி நிறத்தால் ஆன ஹெட்லேம்ப் கவுல், கலர் மேட்சிங் முன்புற ஃபெண்டர், என்ஜின் கவுல், ஸ்ப்லிட் ரக சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ப்ரூக்லின் பிளாக், ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் புளூ என்று மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடவில் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்கும் என தகவல்.
    • இதுதவிர ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 450 மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹிமாலயன் 450 மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    450சிசி பிரிவில் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 450சிசி மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர், புதிய தலைமுறை புல்லட் 350 மற்றும் ஹிமாலயன் 450 போன்ற மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த வரிசையில் 450சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகபட்சம் ஐந்து புதிய 450 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு 450சிசி மோட்டார்சைக்கிளில் முற்றிலும் புதிய 450சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 40 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
    • பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட 350 சிசி சீரிஸ் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இவைதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேலும் சில மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இவை புல்லட் 350 மற்றும் கிளாசிக் 350 பாபர் பெயர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

     

    ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் பாபர் 350 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் கிளாசிக் 350-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், இதில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பாபர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய கிளாசிக் 350 பாபர் மாடலின் டிசைன் மற்றும் பாடி பேனல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடல் கிளாசிக் 350 போன்ற ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இவைதவிர புதிய கிளாசிக் 350 பாபர் மாடலில் கருப்பு நிறத்தில் சற்றே பிரமாண்ட எக்சாஸ்ட், உயரமான ஹேண்டில்பார், பிளாக் நிற ORVMகள், வயர் ஸ்போக் ரிம்கள், டியல் நிற வால் கொண்ட டயர்கள், ரியல் டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளன. சூப்பர் மீடியோர் மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy : rushlane

    • சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை மாற்றப்படுகிறது.
    • வெளியீட்டு நிகழ்வில் சிம்பில் ஒன் மாடலின் வினியோக விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- சிம்பில் ஒன் மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விவரங்கள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் விலையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

    அதன்பின் இந்த ஸ்கூட்டரின் பேட்டரி பேக் மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரின் விலையும் மாற்றப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 8.5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சம் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    முன்னதாக சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை இந்த ஆண்டு துவங்கியது. இந்த ஆலையிலேயே சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் பற்றிய தகவல்கள் வெளியீட்டின் போது அறிவிக்கப்படலாம். 

    ×