search icon
என் மலர்tooltip icon

    பைக்

    300 கிமீ ரேன்ஜ் கொண்ட சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவக்கம்!
    X

    300 கிமீ ரேன்ஜ் கொண்ட சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவக்கம்!

    • சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.
    • வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவித்து இருக்கிறது. புதிய சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. சிம்பில் ஒன் மாடலின் உற்பத்தி தமிழ் நாட்டின் சூலகிரி ஆலையில் நடைபெற்று வருகிறது.

    வெளியீட்டு நிகழ்வை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது. எனினும், வினியோக தேதி இன்னமும் சரியாக அறிவிக்கப்படாமல் உள்ளது. முன்னதாக 2021 ஆண்டு ப்ரோடோடைப் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் மாடலில் 4.5 மற்றும் 4.8 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளன.

    பின் இந்த ஸ்கூட்டரில் அதிக திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என்று சிம்பில் எனர்ஜி அறிவித்தது. அதன்படி சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    இதன் ப்ரோடோடைப் வெர்ஷனில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் வைபை, கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, நான்கு ரைடிங் மோட்கள் என்று ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் மோனோஷாக், இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருந்தது. இதே அம்சங்கள் அதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×