search icon
என் மலர்tooltip icon

    பைக்

    அசத்தலாக உருவாகும் ராயல் என்பீல்டு ஹண்டர் 450 - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கோப்புப்படம்

    அசத்தலாக உருவாகும் ராயல் என்பீல்டு ஹண்டர் 450 - வெளியீடு எப்போ தெரியுமா?

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடவில் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்கும் என தகவல்.
    • இதுதவிர ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 450 மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஹிமாலயன் 450 மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    450சிசி பிரிவில் பல்வேறு மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 450சிசி மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் சூப்பர் மீடியோர் 650 மாடலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை இருக்கை கொண்ட கிளாசிக் 350 பாபர், புதிய தலைமுறை புல்லட் 350 மற்றும் ஹிமாலயன் 450 போன்ற மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    கோப்புப்படம்

    இந்த வரிசையில் 450சிசி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகபட்சம் ஐந்து புதிய 450 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு 450சிசி மோட்டார்சைக்கிளில் முற்றிலும் புதிய 450சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் 40 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×