search icon
என் மலர்tooltip icon

    பைக்

    அசத்தல் மாற்றங்களுடன் பாபர் 350 - இணையத்தில் வெளியான ஸ்பை படங்கள்!
    X

    அசத்தல் மாற்றங்களுடன் பாபர் 350 - இணையத்தில் வெளியான ஸ்பை படங்கள்!

    • ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
    • பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட 350 சிசி சீரிஸ் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கிளாசிக் 350, மீடியோர் 350 மற்றும் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

    இவைதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மேலும் சில மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெ சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இவை புல்லட் 350 மற்றும் கிளாசிக் 350 பாபர் பெயர்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    ஒற்றை சீட் கொண்ட கிளாசிக் 350 மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனம் பாபர் 350 மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் கிளாசிக் 350-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. எனினும், இதில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

    இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பாபர் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி புதிய பாபர் 350 தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மாடலை விட பெருமளவு வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய கிளாசிக் 350 பாபர் மாடலின் டிசைன் மற்றும் பாடி பேனல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடல் கிளாசிக் 350 போன்ற ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இவைதவிர புதிய கிளாசிக் 350 பாபர் மாடலில் கருப்பு நிறத்தில் சற்றே பிரமாண்ட எக்சாஸ்ட், உயரமான ஹேண்டில்பார், பிளாக் நிற ORVMகள், வயர் ஸ்போக் ரிம்கள், டியல் நிற வால் கொண்ட டயர்கள், ரியல் டெயில் லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் உள்ளன. சூப்பர் மீடியோர் மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy : rushlane

    Next Story
    ×