என் மலர்tooltip icon

    பைக்

    • ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • மற்ற அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

    ஹோண்டா நிறுவனத்தின் CB200X மோட்டார்சைக்கிள் மாடல் சத்தமின்றி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் தற்போது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டம் வழங்கப்படுவதால், பைக்கின் கிளட்ச் லீவரை சிரமம் இன்றி பயன்படுத்த முடியும்.

    அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் பைக்கை ஓட்டும் போது இந்த சிஸ்டம் உதவிகரமாக இருக்கும். இத்துடன் ஸ்லிப்பர் வசதி மூலம், பைக்கின் கியரை குறைக்கும் போது வீல் லாக் ஆவதை தடுக்கும். CB200X மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    ஹோண்டா CB200X மாடல் ஹார்னெட் 2.0 பைக்கின் அட்வென்ச்சர் வெர்ஷன் ஆகும். இந்த பைக்கின் முன்புறம் சற்றே உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது பைக்கை ஓட்டுவோருக்கு சவுகரியமான வசதியை வழங்குகிறது. இவைதவிர இந்த பைக்கின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த பைக்கில் புதிய ஃபேரிங், உயரமான வின்ட்-ஸ்கிரீன் உள்ளிட்டவை வழக்கமான அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹோண்டா CB200X மாடலில் 184.4 சிசி, ஏர்-கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17 ஹெச்.பி. பவர், 15.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஓலா ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • சில மாடல்களுக்கு ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது. அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில், ஓலா S1 X மாடலை வாடிக்கையாளர்கள் ரூ. 74 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் துவக்க விலையில் வாங்கிட முடியும். மேலும், பயனர்கள் தங்களது பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கொடுத்து புதிய ஓலா ஸ்கூட்டரை வாங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் ரூ. 40 ஆயிரம் வரை வழங்குகிறது.

     


    ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ஏழே நாட்களில் டெலிவரி வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. ஓலா S1 X பிளஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இம்மாத இறுதி வரை வழங்கப்படும்.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஓலா S1 மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. 

    • பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.
    • இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் 100 மோட்டார்சைக்கிள் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. அறிமுகமான முதல் ஆண்டில் ஷைன் 100 மோட்டார்சைக்கிள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. புதிய மைல்கல்லை ஒட்டி ஹோண்டா நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்களில் சிறப்பு வினியோக நிகழ்வுகளை நடத்தியது.

    இந்த மைல்கல் மூலம் ஹோண்டா நிறுவனம் 2024 நிதியாண்டின் 100 முதல் 110சிசி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்தது. அதிக மைலேஜ் மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவை இந்த மாடல் அதிவேக பிரபலம் அடைய காரணமாக அமைந்தது. இத்துடன் நாடு முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக டச் பாயிண்ட்கள் மூலம் ஹோண்டா நிறுவனம் விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை வழங்கி வருகிறது.

     


    ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 66 ஆயிரத்து 600 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 98.08சிசி, 4 ஸ்டிரோக், SI எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 5.43 கிலோவாட் பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இவுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.
    • ரைடர், எக்ஸ்டிரீம் 125 மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் 125சிசி பிரிவில் கடுமையான போட்டி உருவாகி உள்ளது. டி.வி.எஸ். மற்றும் ஹீரோ நிறுவனங்கள் முறையே ரைடர் மற்றும் எக்ஸ்டிரீம் 125R போன்ற மாடல்களை 125சிசி பிரிவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பஜாஜ் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய பைக்கில் சற்றே மெல்லிய டயர்கள், பின்புறம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு இந்த பைக் வழக்கமான 150-160 சிசி பிரிவில் இடம்பெறாது என்பதை உணர்த்துகிறது.

     


    இந்த பைக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் எல்.இ.டி. ஹெட்லைட் வித்தியாசமான வடிவம், தடிமனான டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இருக்கைகள் ஸ்ப்லிட்-சீட் வடிவில் உள்ளன. இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, இந்த பைக் 125சிசி பிரிவில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    அந்த வரிசையில், இந்த பைக் 125 சிசி பிரிவில் டி.வி.எஸ். ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்டிரீம் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய பைக் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படலாம்.

    • இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் M 1000 XR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது S 1000 XR மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் விலை ரூ. 22.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

     


    இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலின் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக், கிராவிட்டி புளூ மெட்டாலிக் நிறங்களிலும், வைட் சாலிட் பெயின்ட் / மோட்டார்ஸ்போர்ட் (M பேக்கேஜ் உடன்) நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த பைக் உடன் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் ரைடர் மோட் ப்ரோ, ஹீட்டெட் க்ரிப், ஹெட்லைட் ப்ரோ மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட், குரூயிஸ் கண்ட்ரோல், கீலெஸ் ரைட், யு.எஸ்.பி. சார்ஜர் மற்றும் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிள் M பேக்கேஜ் உடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பிரத்யேக நிற ஆப்ஷன், M ஸ்போர்ட் சீட், M லைட் வெயிட் பேட்டரி, M ஃபோர்ஜ் செய்யப்பட்ட வீல்கள், M என்டூரன்ஸ் செயின், M GPS லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் விண்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலில் 999 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 168 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

    இந்த பைக் - ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்குவித ரைடிங் மோட்களில் கிடைக்கிறது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இந்த பைக் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
    • சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2024 பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் F250 விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் பல்சர் NS400Z மாடலின் சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பைக்கின் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த பைக் அதன் 2023 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த பைக் முற்றிலும் புதிய பிளாக் நிறம் பூசப்பட்டு ரெட் மற்றும் வைட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2023 மற்றும் 2024 மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் உள்ளது.

    இதுதவிர புதிய 2024 பைக்கில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய F250 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது. இந்த பைக்- ரெயின், ரோட் மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    2024 பல்சர் F250 மாடலில் 259.07சிசி, ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • 160சிசி-யில் கிடைக்கும் இரு மாடல்களிலும் மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன.
    • அபாச்சி RTR 160 2V மாடலில் 159.7சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் RTR 160 மற்றும் RTR 160 4V மாடல்களின் "பிலேஸ் ஆஃப் பிளாக்" டார்க் எடிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய RTR 160 பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் RTR 160 4V பிளாக் எடிஷன் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இரு மாடல்களிலும் ஷைனி பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பைக் டேன்க் பகுதியில் டி.வி.எஸ். அபாச்சி ஸ்டேலியன் லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் எக்சாஸ்ட் பிளாக்டு அவுட் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் தவிர இந்த பைக்குகளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    160சிசி-யில் கிடைக்கும் இரு மாடல்களிலும் மூன்று ரைடிங் மோட்கள், டி.வி.எஸ். SmartXonnect சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. அபாச்சி RTR 160 2V மாடலில் 159.7சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 15.82 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    அபாச்சி RTR 160 4V மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 17.35 ஹெச்.பி. பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    • புதிய CB500 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும்.
    • இந்த பைக்கில் 471சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு எனஜின் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் மிடில்வெயிட் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹோண்டா நிறுவனம் CB500 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்று இருக்கிறது.

    புதிய CB500 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் EICMA 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த பைக்கின் ஸ்டைலிங் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது. இந்த மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட் கிளஸ்டர், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் மெல்லிய டெயில் பகுதி வழங்கப்படுகிறது.

     


    ஹோண்டாவின் புதிய மிடில்வெயிட் ஸ்டிரீட் நேக்கட் பைக்கில் 471சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய ஹோண்டா பைக்கில் எல்.இ.டி. லைட்டிங், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 5 இன்ச் அளவில் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இந்த பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 500சிசி, ஸ்டிரீட் நேக்கட் பைக் மாடலாக இருக்கும்.

    • பி.எம்.டபிள்யூ. பைக்கில் 999சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் இந்தியா நிறுவனம் தனது சக்திவாய்ந்த முற்றிலும் புதிய M 1000 XR சூப்பர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலின் விலை ரூ. 45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் விசேஷமான ஹை-கிளாஸ் பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது பைக்கின் ஹை-கிலாஸ் கார்பன் ஃபைபர் பேனல்களுக்கு முரணாக காட்சியளிக்கிறது. இதுதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த தோற்றமும் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், சிறிய வின்ட் ஸ்கிரீன், பின்புறம் கிராப் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பி.எம்.டபிள்யூ. M 1000 XR மாடலில் 999சிசி, இன் லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 278 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    பி.எம்.டபிள்யூ.-வின் முற்றிலும் புதிய சூப்பர் பைக் மாடல்- ரோட், டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ போன்ற நான்கு ரைட் மோட்களை கொண்டுள்ளது. இத்துடன் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் பைக்கில் 6.5 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஐகியூப் ST வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் ST மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது.

    புதிய ஐகியூப் வேரியண்ட் இதே ஸ்கூட்டரின் 3.4 கிலோவாட்ஹவர் பேட்டரி கொண்ட வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ST மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.

    அந்த வகையில், இந்த ஸ்கூட்டர் முதலில் முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரை கடந்த 2022 ஜூலை 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸ் சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    புதிய ஐகியூப் ST வேரியண்ட் 3.4 கிலோவாட் ஹவர் மற்றும் 5.1 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 5.1 கிலோவாட் ஹவர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. புதிய ஐகியூப் ST வேரியண்டின் இரண்டு வெர்ஷன்களுடன் 950 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 

    • இது ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • இந்த மாடலில் பல்வேறு வசதிகள் வழங்கப்படலாம்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களின் ப்ரோடோடைப் வெர்ஷனை ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில், தான் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களில் ஒன்றுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த பைக்கின் டிசைன் பார்க்க ரோட்ஸ்டர் கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இது ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

     


    இது தொடர்பான டிசைன் காப்புரிமைகளில் இந்த எலெக்ட்ரிக் பைக் க்ளிப் ஆன் ஹேண்டில்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் யு.எஸ்.டி. ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன. இதில் டிஸ்க் பிரேக் இடதுபுறமாக வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த மாடலில் டி.எஃப்.டி., எல்.இ.டி. இலுமினேஷன், ரைட் மோட் என பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.  

    • இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.
    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் வெளியானது.

    பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்கள் இடையிலான கூட்டணி மூலம் டிரையம்ப் பிராண்டிங்கில் குறைந்த விலை மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 400சிசி, சிங்கிள் சிலிண்டர் பிளாட்ஃபார்மில் டிரையம்ப் நிறுவனம் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த நிலையில், 2024 இறுதிக்கிள் மற்றொரு புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பஜாஜ் ஆட்டோ தலைமை செயல் அதிகாரி ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இந்த மோட்டார்சைக்கிள் மிடில் வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பான தகவலை தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

    புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் திரக்ஸ்டன் 400 மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் திரக்ஸ்டன் மாடலை போன்ற தோற்றம் கொண்ட செமி-ஃபேர்டு மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400X போன்றே இந்த பைக்கும் 400சிசி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என தெரிகிறது. இந்த பைக் கஃபே ரேசர் பிரிவில் இடம்பெறும் என்றும் இதன் விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. 

    ×