search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 22.5 லட்சம் துவக்க விலையில் புது பைக் அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.
    X

    ரூ. 22.5 லட்சம் துவக்க விலையில் புது பைக் அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.

    • இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் M 1000 XR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது S 1000 XR மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் விலை ரூ. 22.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.


    இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலின் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக், கிராவிட்டி புளூ மெட்டாலிக் நிறங்களிலும், வைட் சாலிட் பெயின்ட் / மோட்டார்ஸ்போர்ட் (M பேக்கேஜ் உடன்) நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த பைக் உடன் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

    இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் ரைடர் மோட் ப்ரோ, ஹீட்டெட் க்ரிப், ஹெட்லைட் ப்ரோ மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட், குரூயிஸ் கண்ட்ரோல், கீலெஸ் ரைட், யு.எஸ்.பி. சார்ஜர் மற்றும் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிள் M பேக்கேஜ் உடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பிரத்யேக நிற ஆப்ஷன், M ஸ்போர்ட் சீட், M லைட் வெயிட் பேட்டரி, M ஃபோர்ஜ் செய்யப்பட்ட வீல்கள், M என்டூரன்ஸ் செயின், M GPS லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் விண்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலில் 999 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 168 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.

    இந்த பைக் - ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்குவித ரைடிங் மோட்களில் கிடைக்கிறது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×