என் மலர்
பைக்
டிரையம்ப் நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. எனினும், இந்நிறுவனம் டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் டைகர் 900 மாடலை தழுவி உருவாகிறது. எனினும், இதன் வடிவமைப்பு டைகர் 900 மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்புறம் பெரிய பேரிங், ட்வின் ஹெட்லேம்ப் செட்டப், பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் டைகர் 900 மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவரை 8750 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.
அறிமுகமானதும் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடல் பிஎம்டபிள்யூ எப்900எக்ஸ்ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. இதுவரை டைகர் ஸ்போர்ட் பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய பிஎஸ்4 மாடல்களை விட சற்றே விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
விலை குறைவை தொடர்ந்து இரு மாடல்களும் விரைவில் ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளன. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய மைல்கல்லை பிஎம்டபிள்யூ எட்டி இருக்கிறது.

இந்தியாவில் ஜி 310 ஆர் மாடல் விலை ரூ. 2.45 லட்சம் என்றும், ஜி 310 ஜிஎஸ் மாடல் விலை ரூ. 2.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை பிஎஸ்4 மாடல்களை விட முறையே ரூ. 54 ஆயிரம் மற்றும் ரூ. 64 ஆயிரம் வரை குறைவு ஆகும்.
புதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய Meteor 350 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மாடல் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் நவம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
புதிய Meteor 350 மாடல் ஜாவா, பெனலி இம்பீரியல் 400 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு Meteor 350 பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்கள் மற்றும் ஏழு வித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு Meteor 350 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹீரோ நிறுவனத்தின் புதிய Nyx-HX இ ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் Nyx-HX இ ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 64,640 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 210 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

புதிய Nyx-HX மாடலில் காம்பி பிரேக் சிட்ஸம், ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங், ஸ்ப்லிட் சீட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை தேவைப்படும் சமயங்களில், பின்புற சீட்டை கழற்றி லோடு ஏற்றி செல்லவும் பயன்படுத்தலாம். இதில் ப்ளூடூத் சார்ந்த ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள மாட்யூலர் பேட்டரி சிஸ்டம் நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி ஸ்வாப்பிங் முறையை கொண்டு பயன்பாட்டில் உள்ள பேட்டரியின் சார்ஜ் தீர்ந்து போனால், மற்றொரு பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தி உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஆர்டிஆர்200 4வி சீரிஸ் விலையை ரூ. 1500 வரை உயர்த்தி உள்ளது. விலை உயர்வின் படி டாப் எண்ட் டூயல் டிஸ்க் மாடல் விலை ரூ. 1,30,050 என்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் ரூ. 1,25,500 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு மட்டுமின்றி டிவிஎஸ் பல்வேறு பண்டிகை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் மிக குறைந்த முன்பணம் செலுத்துவதோடு மாதம் ரூ. 2,999 எனும் மாத தவணையில் மோட்டார்சைக்கிளை வாங்கி கொள்ள முடியும்.

இத்துடன் முதல் மூன்று மாதங்களுக்கு மாத தவணையில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தி மீதமுள்ள தவணையை மற்ற மாதங்களில் செலுத்தலாம். மேலும் டிவிஎஸ் நிறுவனம் மாத தவணை முறையை எளிமையாக்கி, கடன் வழிமுறையே வேகமாக நிறைவு செய்கிறது.
இந்திய சந்தையில் அபாச்சி ஆர்டிஆர்200 4வி மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0, பஜாஜ் பல்சர் என்எஸ்200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி 350 மாடல் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சிபி 350 மோட்டார்சைக்கிளை உற்பத்தி ஆலையில் இருந்து விநியோகம் செய்ய துவங்கி உள்ளது. இதன் முதல் யூனிட் ஹரியானா மாநிலத்தின் மனேசர் ஆலையில் இருந்து அனுப்பப்பட்டது.
உற்பத்தி ஆலையில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இது வாடிக்கையாளர்களுக்கு விநியோரம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஹைனெஸ் சிபி 350 மாடல் ஹோண்டாவின் பிரீமியம் ரக பிங்விங் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் என்டார்க் 125 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் என்டார்க் 125 ஸ்பெஷல் எடிஷன் மாடலை சூப்பர் ஸ்குவாட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 85,992, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலுக்காக டிவிஎஸ் மோட்டார் கம்பெணி டிஸ்னி இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் கீழ் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் மார்வெல் அவெஞ்சர்ஸ் தீமை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் மாடல் இன்வின்சிபில் ரெட், காம்பேட் புளூ மற்றும் ஸ்டெல்த் பிளாக் என மூன்று வித நிறம் மற்றும் கிராபிக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கஸ்டம் யுஐ சார்ந்த கதாபாத்திரங்களை கொண்டிருக்கிறது.
என்டார்க் ஸ்பெஷல் எடிஷன் மாடலிலும் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 9.25 பிஹெச்பி மற்றும் 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தள்ளுபடி வவுச்சர் அல்லது இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தள்ளுபடி நவம்பர் 30 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும். பண்டிகை கால விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் கவாசகி வெர்சிஸ் 650 மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65.7 பிஹெச்பி பவர், 61 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பிஎஸ்4 மாடல் என்ஜின் 67.4 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் மாடல் அறிமுக விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது டிரைடென்ட் மாடல் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த மாடல் ஸ்டிரீட் டுவின் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம். முன்னதாக டிரைடென்ட் மாடல் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் ப்ரோடக்ஷன் ரெடி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. புதிய டிரைடென்ட் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனினும், இதில் 660சிசி, இன்-லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் 2020 ஸ்டிரீட் டிரிபில் எஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இது 95 பிஹெச்பி பவர், 66 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரைடென்ட் மாடலிலும் இதே செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் என்எஸ் மற்றும் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள்களை அசத்தலான புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் என்எஸ் மற்றும் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அசத்தலான புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றுடன் புதிய பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சீரிசில் பல்சர் என்எஸ்160, என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 மாடல்கள் உள்ளன. இதில் 160சிசி மாடல் விலை ரூ. 1.08 லட்சம், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 மாடல்கள் விலை முறையே ரூ. 1.31 லட்சம் மற்றும் ரூ. 1.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பல்சர் மோட்டார்சைக்கிள்கள் தற்சமயம் - பர்ன்ட் ரெட் (மேட் பினிஷ்) மற்றும் பிளாஸ்மா புளூ (சேடின் பினிஷ்) என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் இவை வைட் நிற அலாய் வீல்களுடன் கிடைக்கின்றன. இதன் பென்டர்கள் கார்பன் பைபர் பினிஷ் செய்யப்பட்டுள்ளன.
புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்சமயம் இவை காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இவற்றின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 60,950, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் அப்டேட்கள், புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கிடைக்கிறது. பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் மாடல் புதிய மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் உள்புற பேனல்கள் பிரவுன் நிறம் கொண்டிருக்கிறது.
பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கண்ணாடிகள், மப்ளர் ப்ரோடெக்டர்கள் மற்றும் ஹேண்டிள்பார் எண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹீரோ பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷனில் 110சிசி பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் விரைவில் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது.
எனினும், கேடிஎம் விற்பனையாளர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது தோற்றத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் போன்றே காட்சியளிக்கிறது.
என்ட்ரி லெவல் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் முந்தைய 390 அட்வென்ச்சர் மாடலை விட ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






