என் மலர்
- யூனியன் அலுவலகம் அருகே காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்தது.
- மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே காமராஜ் நகர் வடக்கு- தெற்கு என இரு பகுதிகளுக்கும் சேர்த்து காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது அதனை அகற்றியுள்ளனர்.
½ கிலோ மீட்டர்
பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பகுதி பொது மக்கள் மற்றும் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவ ர்கள் அனைவரும் காமராஜ் நகர் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நான்கு வழிச் சாலை பணி முடிவுற்ற நிலையில் காமராஜ்நகர் பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்காமல் அதிலிருந்து கிழக்கே ½ கிலோ மீட்டர் தொலைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே புதிய பஸ் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிக்கு பஸ்கள் மூலம் வரும் மாணவர்கள் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கோரிக்கை
எனவே குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகம் பள்ளி இருக்கும் பகுதியில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பாவூர்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்பு வாசிகளின் சார்பில் கோரி க்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கோவில் உள்பிரகாரத்தில் சுவாமிகள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
சிவகிரி:
சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், திருநீலகண்ட சுவாமி - சமேத மீனாட்சியம்மன் கோவில், கருணையானந்தா சித்தர் கோவில், அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவில், ராமநாத சுவாமிகள் சித்தர் கோவில், நாதகிரி முருகன் கோவில், விஸ்வை அங்காள ஈஸ்வரி கோவில், தென்மலை திரிபுரநா தேஸ்வரர் சுவாமி - சிவபரிபூரணி அம்மன் கோவில், ராமநாதபுரம் சுயம்புலிங்க சுவாமி கோவில், தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் கோவில், சிவகிரி அருகே சொக்க நாதன்புத்தூர் தவநந்தி கண்டேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆனி மாதம் சனி மகா பிர தோஷ பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு காட்சி
சுவாமிகள் அலங்க ரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுத்தருளி கோவில் உள்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சப்பரத்துக்கு முன்பாக தேவாரம் பக்திப் பாடல்கள் குழுவை சேர்ந்த குழுவினர் தேவார பக்தி பாடல்கள் பாடியபடி நூற்றுக்கணக்கான பெண்களுடன் முன்னே செல்ல சப்பரம் பின்னால் தொடர்ந்து வந்தது.
தீபாராதனை
பின்னர் சிவன், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு வெல்லம் அரிசி, பஞ்சாமிர்தம், புளி யோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், தயிர்சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
- அசோக்ராஜின் பெரியப்பா துரை ராஜையும் அந்த கும்பல் வெட்டிக்கொன்றது.
- மைனர் பாண்டிக்கு சொந்தமான நிலம், அசோக் ராஜ் வீட்டின் அருகில் உள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் அசோக்ராஜ் (வயது 27). வக்கீல்.
இரட்டைக்கொலை
இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த போது, திடீரென்று பின்பக்க வாசல் வழியாக வந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதனை தடுக்க முயன்ற அசோக்ராஜின் அக்காள் அருள்ஜோதியின் (33) கைவிரலிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வந்த கும்பல், சாலையோரம் நின்று கொண்டிருந்த அசோக்ராஜின் பெரியப்பா துரை ராஜை (55) வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடியது.
ராணுவ வீரர்
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஆலங் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இடத்தகராறில் அதே பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தி னர் இவர்கள் இருவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ், அவருடைய தந்தை குழந்தை பாண்டி (60), தாயார் ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன் (32), குமார் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சுரேஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
கோர்ட்டில் வழக்கு
வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர் மைனர் பாண்டி. இவருக்கு சொந்தமான நிலம், நெட்டூரில் அசோக் ராஜ் வீட்டின் அருகில் உள்ளது.
அதனை என் மூலம் விற்க ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த நிலம் தொடர்பாக அசோக்ராஜ் தரப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக எங்களுக்குள் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த நான் சம்பவத்தன்று அங்கு சென்று அசோக்ராஜ், துரைராஜ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்தேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- நிர்வாக அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம் கால்நடை வளாகத்தில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
பாதுகாப்பு-ஆராய்ச்சி மையம்
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நாட்டின நாய்களான ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் 2022-23-ம் நிதியாண்டில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் தென்காசி மாவட்டத்தில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவின் போது பாவூர்சத்திரம் கால்நடை மருந்தகம் வளாகத்தில் கட்டப்படும் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிர்வாக அனுமதி
அதனை தொடர்ந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு நாட்டின நாய்களின் பாதுகாப்பு மையம் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நாட்டின் நாய்கள் ஆராய்ச்சி மைய தலைவர் ரவிமுருகன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, துணை சேர்மன் முத்துக்குமார், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கரத்தினம், குமார்பாண்டியன், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் வைகுண்டராஜா, குலசேகரபட்டி ஊராட்சி தலைவர் முத்துமாலை அம்மாள் மதிச்செல்வன், துணை தலைவர் திருவளர்ச்செல்வி சாமி ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நாட்டின நாய்கள் வளர்க்கும் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பணத்தை இழந்த 4 பேரின் ரூ. 7 லட்சத்து 28 ஆயிரத்து 946 மீட்கப்பட்டது.
- தென்காசி மாவட்டத்தில் இதுவரை 533 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவு படியும், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோரின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பக பிரியா மற்றும் சைபர் கிரைம் போலீசாரின் தீவிர முயற்சியால் தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ. 9 கோடியே 17 லட்சத்து 8,500 முடக்கம் செய்யப்பட்டது. இதில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ 31 லட்சத்து 67 ஆயிரத்து 196 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 பேரின் ரூ. 7 லட்சத்து 28 ஆயிரத்து 946 மீட்கப்பட்டது. மேலும் காணாமல் போன ரூ. 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் கண்டுபி டிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் செல்ேபான்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மூலம் உரியவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் மூலமாக இதுவரை 533 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ. 83 லட்சம் ஆகும்.
- தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமானர் அனுஞ்ஞை, மகா கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யபூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பூஜை, மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள், குலசேகரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பத்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
- புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.
கடையம்:
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அ.முகைதீன்பீவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- அருண் பிரகாஷ் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
- லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
நெல்லை:
பாளை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ்(வயது 20). இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
பழுதாகி நின்ற கார்
சம்பவத்தன்று இரவு சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் பழுதாகி நின்ற காரை சரி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் பிரகாஷ் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.
உடனே ஆலங்குளம் போலீசார் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர்.
- ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது
காயிதே மில்லத் திடலில் நடைபெற்ற தொழுகையில் திராளனோர் கலந்து கொண்டனர். தொழுகையை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்-சிறுமிகளும் தொழுகைக்காக அங்கு வரத் தொடங்கினர். 6.30 மணியளவில் மாநில செயலாளர் செங்கை பைசல் தலைமை தாங்கி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் கிளைத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் செய்து இருந்தனர்.
இதேபோல் பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு, பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி , மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன் , மஹ்மூதாநகர் ரபீக் ராஜா மதினா நகர் பள்ளி திடல், அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் தொழுகை நடை பெற்றது .
முன்னதாக தொழுகை பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.
தொழுகைக்கு பின்னர் கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சிகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் 3 இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்பு பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி தலைமையிலும், கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி தொழுகை நடத்தியும் குத்பா பிரசங்கம் செய்தனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான் , செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர், வடகரை, வீராணம், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசு தேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தொழுகை நடைபெற்றது.
- மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.
- தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் கரிவலம் வந்த நல்லூர் வடக்குரத வீதியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து தலைமை தாங்கினார்.
மோகன்குமார், அழ கையா ரவி, ஸ்தோவான், சண்முகத்தாய், ஈஸ்வரன், தங்கவேல், முருகேசன், மாரியப்பன், கனகசபை , கருணாநிதி முத்துக்குமார வேல் , பத்மநாபன், பஞ்சாயத்து தலைவர்கள் தினேஷ் சரவண பெருமாள் மற்றும் கார்த்தி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூ.எஸ்.டி. சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., முன்னாள் அமை ச்சர் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தனது வாழ்நாள் முழுவதும் பொது மக்களுக்காகவே வாழ்ந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞர். 2 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கல்வியில் சாதனை புரிந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாணவர்களை அழைத்து பாராட்டும் பொழுது அவர்கள் கலைஞரால்தான் எங்கள் பெற்றோர்கள் படித்தார்கள். அதனால் தான் நாங்களும் படிக்கும் வாய்ப்பினை பெற்று இருக்கிறோம் என பெரு மிதத்துடன் தெரிவித்தனர். பள்ளிகளில் கணினி பாடத்தை அறிமுகப் படுத்தியவர் கலைஞர். அதனால் பல மாணவர்கள் கலைஞரால் உருவாக்கப்பட்ட டைட்டில் பார்க்கில் பணிபுரிந்து வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களும் கலைஞரால் பயன் பெற்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே வழியில் திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி என்பது கலைஞர் ஆட்சியின் நீட்சி என்றே சொல்லலாம்.
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநில அரசுகளை அவர்கள் முடிந்தவரை தங்களிடம் உள்ள துறை களை ஏவி மாநில அரசுகளை விரட்டி யும், மிரட்டியும் வருகிறது. தி.மு.க.வை பா.ஜ.க. ஒரு போதும் அச்சுறுத்த முடியாது. 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு ஊதியம் முறை யாக வழங்கப்பட வில்லை. மேலும் தற்போது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிரதமர் வெளிநாடு பயணங்கள் சென்று வருகின்றார்.
மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது உண்மை. தற்போது இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்சிகளை ஒருங்கி ணைத்து செயல்பட்டு வருகின்றார். சில தினங்க ளுக்கு முன்பு பாட்னாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் பலனாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதானி மற்றும் அம்பானிகள் போன்றவர்களுக்கு மட்டும் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றி சாதாரண மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கிடைக்க கூடிய மக்களாட்சியாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தமிழ்நாட்டின் துணை யோடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒருங்கி ணைப்பில் கண்டி ப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இப்போதைய பா.ஜ.க. அரசு மாநிலங்களில் மக்களை பிரித்து வன்முறை களை தூண்டி விட்டு குளிர் காய நினைக்கின்றது . வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாதி, மதத்தால் அரசியல் செய்துவரும் பா.ஜ.க.வை அகற்றிவிட்டு மக்களுக்கான ஆட்சி அமைய அனைவரும் இதற் கான பணியை இப்பொ ழுதே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பயனாளி களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு,மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவை தலைவர் பத்மநாதன்,மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை ,பொது க்குழு உறுப்பி னர்கள் பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மாரிச்சாமி, மகேஸ்வரி ,ஒன்றிய செயலாளர்கள்
பூசைபாண்டியன் , கடற்கரை, கிறிஸ்டோபர், பெரிய துரை, பொன் முத்தையா பாண்டியன், ராமச்சந்திரன், சேர்ம துரை,நகர செயலாளர்கள் அந்தோணிராஜ், பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன்,மாவட்ட அணி அமைப்பா ளர்கள் காசி ராஜன், கிப்ட்சன்,சந்திரன் மற்றும் தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் நெல்சன், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், வாழைக்காய் துரைப்பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி யோகேஷ் குமார் ,டாஸ்மாக் நிர்வாகி கள் பெர்ணா ன்டோ ,மனோகரன், மணி, சிவாஜி, பிரகாஷ் , அன்சாரி, கணேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.
- பேரணியை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தொடங்கி வைத்தார்.
- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
செங்கோட்டை:
செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் பேரணியாக வாஞ்சி நாதன் சிலை, கீழபஜார், காவல்நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் இளவரசன் ஆகியோர் எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் திர ளாக கலந்து கொண்டனர். பள்ளி உடற் கல்வி இயக்கு னர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.
- முனியாண்டியும், குருசாமியும் மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனியாண்டி படுகாயம் அடைந்தார்.
நெல்லை:
சிவகிரி அருகே ராமநாதபுரம் செம்புலிங்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 36).
இவரும் திருமலாபுரத்தை சேர்ந்த குருசாமி என்பவரும் கடந்த 23-ந் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
வாசுதேவநல்லூர் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த வேப்பமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயங்களுடன் குருசாமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







