என் மலர்
நீங்கள் தேடியது "சைபர் திருட்டு"
- பணத்தை இழந்த 4 பேரின் ரூ. 7 லட்சத்து 28 ஆயிரத்து 946 மீட்கப்பட்டது.
- தென்காசி மாவட்டத்தில் இதுவரை 533 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவு படியும், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோரின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பக பிரியா மற்றும் சைபர் கிரைம் போலீசாரின் தீவிர முயற்சியால் தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ. 9 கோடியே 17 லட்சத்து 8,500 முடக்கம் செய்யப்பட்டது. இதில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ 31 லட்சத்து 67 ஆயிரத்து 196 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 பேரின் ரூ. 7 லட்சத்து 28 ஆயிரத்து 946 மீட்கப்பட்டது. மேலும் காணாமல் போன ரூ. 13 லட்சம் மதிப்பிலான 80 செல்போன்கள் கண்டுபி டிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் செல்ேபான்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மூலம் உரியவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் மூலமாக இதுவரை 533 செல்போன்கள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ. 83 லட்சம் ஆகும்.






