என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரர் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சிட்னி:
நடப்பு ஆண்டில் டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கண்காட்சி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாடுகிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்ததுடன், கடந்த 2022-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
- ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
லண்டன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.
- 2006-ல் இருந்து 40 இடத்திற்கு மேல் சரிந்ததில்லை.
- தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.
2026-ல் இன்னும் டென்னிஸ் சீசனை தொடங்காத முன்னணி வீரரான ஜோகோவிச், ஆண்களுக்கான தரவரிசையில் 20 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜோகோவிச் 2026-ல் இளம் வீரராக முதல் பிரெஞ்ச் ஓபன் போட்டியிலேயே காலிறுதிக்கு முன்னேறி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். அதில் இருந்து டென்னிஸ் உலக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
பல ஜாம்பவான்கள் வந்து சென்றுள்ளனர். எல்லோரையும் சந்தித்துள்ளார். பெடரர் முதல் நடால் வரை சந்தித்துள்ளார். தற்போது இளம் தலைமுறையினரையும் சந்தித்துள்ளார்.
டென்னிஸ் போட்டியில் ஏற்றம் இறக்கத்தையும் சந்தித்துள்ளார். இருந்தபோதிலும், 2006-ல் இருந்து டென்னிஸ் தரவரிசையில் 40 இடங்களுக்கு மேல் ஒருபோதும் போனதில்லை.
தற்போது ஜோகோவிச் 4-வது இடத்தில் உள்ளார். அல்காரஸ், ஜெனிக் சின்னெர், ஸ்வெரேவ் ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர்.
- ஜெர்மனி வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வி.
- கடந்த வாரம் நடைபெற்ற தொடரிலும் தொடக்க சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், முதல் சுற்று போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வைல்டு கார்டு அனுமதி பெற்ற 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், ஹோபார்ட் ஓபனில் விளையாடவும் வைல்டு கார்டு அனுமதி பெற்றார்.
இன்று வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என நேர்செட்டில் கணக்கில் தோல்வியை சந்தித்தார்.
கடந்த வாரம் நியூசிலாந்தில் நடைபெற்ற ஆக்லாந்து போட்டியிடும் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
ஆஸ்திரேலியா ஓபனில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இரண்டு முறையும் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.
மெல்போர்ன் பார்க்கில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் 5 வருடங்கள் கழித்து விளையாட இருக்கிறார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-6(7-1) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
- சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரீனா சபலென்காவும், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக்கும் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் கோஸ்ட்யூக் அமெரிக்காவின் பெகுலாவை 6-0, 6-3 என வீழ்த்தியிருந்தார். சபலென்கா ரஷியாவின் செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என வீழ்த்தியிருந்தார்.
சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 80 சதவீதம் வெற்றியை பெற்றார். கோஸ்ட்யூக் 57 சதவீதம் வெற்றிகளை பெற்றார். சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரண்டன் நகஷிமாவை சந்திக்கிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
- ஒலிம்பிக் சாம்பியனான குயின்வென் ஜெங் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சிட்னி:
டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான குயின்வென் ஜெங் விலகியுள்ளார்.
இவர் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், போட்டிகளில் இருந்து விலகியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்தின் கமில் மஜாக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி 6-3, 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் அகஷிமா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முதல்தர வீராங்கனையாக சபலென்கா 2-0 என எளிதாக வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் பெகுலா 6-3, 7(7)-6(3) என வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
ஒரு காலிறுதி போட்டியில் முதல்தர வீராங்கனையாக சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-3 நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார். இதில் 11-ம் நிலை வீராங்கனையான முட்சோவா முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ரைபாகினா 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் போட்டிப்போட்டு விளையாடினர். என்றாலும் முட்சோவா 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.
- பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனை தோல்வி அடைந்தார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெண்டா அனிசிமோவா தொடரில் இருந்து வெளியேறினார்.






