தொழில்நுட்பம்

அந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி

Published On 2019-04-18 07:11 GMT   |   Update On 2019-04-18 07:11 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆபாச தகவல்களை தடுக்கும் நோக்கில் புதிய வசதி சேர்க்கப்படுகிறது. #Twitter



ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோருக்கு தீங்கு, ஆபாசம் மற்றும் போலி தகவல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் அந்நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ட்விட்டர் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

ட்விட்டரில் தீங்கு விளைவிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ட்விட்டர் பயனர்களிடம் கருத்து கேட்காமல், இவற்றை கண்காணிக்க பிரத்யேக குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தகவல்களை ஆய்வு செய்யும். அதன்படி ட்விட்டரில் தீங்கு விளைவிப்பதாக குறிப்பிடப்படும் 38 சதவிகித தகவல்கள் ட்விட்டர் குழுக்களுக்கு அனுப்பப்படுகிறது.

ஜனவரி - மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டும், புதிய கணக்குகளை துவங்க முயன்ற சுமார் ஒரு லட்சம் அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டரில் எழுப்பப்படும் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 60 சதவிகிதம் வரை வேகமாக பதில் அளிக்கப்படுகிறது.



ஆபாச தரவுகள் அடங்கிய அக்கவுண்ட்கள் மும்மடங்கு அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். புதிய வழிமுறைகளை பின்பற்றுவதால், 2.5 மடங்கு தனிப்பட்ட விவரங்கள் நீக்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று 38 சதவிகித அச்சுறுத்தல் நிறைந்த தரவுகளை மனித குழுவின் ஆய்வுக்கு பின் நீக்க முடிகிறது. இதனால் ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் கருத்து கேட்க வேண்டிய நிலை மாறியிருக்கிறது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

தீங்கு விளைவிக்கும் தகவல், மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வகையான தகவல்களை ஆய்வு செய்ய பயன்படுத்தும் அதே விதிமுறைகளை பயன்படுத்தி எங்களது குழுவினர் ஆபத்து நிறைந்த தகவல்களை நீக்கி வருகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



எங்களது தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி ஆபத்து நிறைந்த, விதிகளை மீறும் தரவுகளை மற்றவர் குறிப்பிடும் முன் அவற்றை வேகமாக நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். 

இத்துடன் தீங்கான தகவல்களை குறிப்பிடும் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கி அவற்றின் மீது வேகமாக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த சில வாரங்களில் எங்களது விதிமுறைகளை மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறுகிய காலக்கட்டம் என்ற போதும், இவை மிக எளிமையானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News