அறிந்து கொள்ளுங்கள்

வேற லெவல் வசதிகளுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகப்படுத்திய ரியல்மி... விலை தான் ஹைலைட்டே..!

Published On 2025-12-07 14:19 IST   |   Update On 2025-12-07 14:19:00 IST
  • இத்துடன் 108 ஸ்போர்ட்ஸ் மோட்கள், VO2 மேக்ஸ் பதிவுக்கான ஆதரவு உள்ளது.
  • ரியல்மி வாட்ச் 5 மாடல் 460mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி வாட்ச் 5 மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி P4x 5ஜி ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி வாட்ச் 5 மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் அல்ட்ரா மாடலைப் போன்ற டிசைன் கொண்டுள்ளது. இது பல ஸ்டிராப் நிறங்களிலும் வருகிறது. இந்த முறை, சிறந்த கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன.

இதில் ஒரு பெரிய டிஸ்ப்ளே மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இது ஒரு விலையுயர்ந்த வாட்ச் அல்ல, ஆனால் இது முற்றிலும் மலிவு விலையிலும் நிர்ணயிக்கப்படவில்லை.

ரியல்மி வாட்ச் 5 விலை ரூ.4,499 ஆகும். இந்த வாட்ச் வைப்ரண்ட் ஆரஞ்சு, மின்ட் புளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் பிளாக் நிறங்களில் கிடைக்கும். இந்த சாதனத்தின் முதல் விற்பனை வருகிற 10ஆம் தேதி 25 முதல் தொடங்கும். அறிமுக சலுகையாக, ரியல்மி நிறுவனம் இந்த வாட்ச்-ஐ ரூ. 3,999க்கு விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட், ரியல்மி இந்தியா வலைதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல ஆஃப்லைன் சேனல்களில் விற்பனைக்கு வரும்.

ரியல்மி வாட்ச் 5 மாடலில் 600nits பிரைட்னஸ் மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய பெரிய 1.97-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 22mm ஸ்ட்ராப்புடன் கூடிய மெட்டல் யூனிபாடி டிசைனுடன் வருகிறது. இத்துடன் 108 ஸ்போர்ட்ஸ் மோட்கள், VO2 மேக்ஸ் பதிவுக்கான ஆதரவு உள்ளது.

இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, பெண்களின் சுகாதார நுண்ணறிவு மற்றும் பல உள்ளன. புளூடூத் காலிங் மற்றும் NFC சப்போர்ட் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது.

ரியல்மி வாட்ச் 5 மாடல் 460mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. துல்லியமான நேவிகேஷனுக்காக பல செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான ஆதரவுடன் சுயாதீன GPS கொண்டுள்ளது.

Tags:    

Similar News