அசத்தல் பலன்களை வழங்கும் புத்தாண்டு சலுகைகளை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ
- இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
- ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய பிரீபெய்ட் ஆஃபரை " ஹேப்பி நியூ இயர் 2026 " என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு டேட்டா ஆட்-ஆன்கள் முதல் வருடாந்திர சந்தாக்கள் வரை மூன்று புதிய ரீசார்ஜ் ஆப்ஷன்களை கொண்டு வருகிறது. இத்துடன் ஓடிடி பலன்கள் மற்றும் ஏஐ சேவை பலன்களை வழங்குகிறது.
புதிய திட்டங்கள் கூகுள் உடனான குறிப்பிடத்தக்க கூட்டாண்மையை அறிமுகப்படுத்துகின்றன. ஜெமினி ப்ரோ AI சேவையை தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலை ரீசார்ஜ்களுடன் இணைக்கின்றன.
1. ஹீரோ வருடாந்திர ரீசார்ஜ் (ரூ.3,599)
ரூ.3,599 வருடாந்திர ரீசார்ஜ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் தினமும் 2.5 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இவற்றுடன் கூகுள் ஜெமினி ப்ரோ திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும்.
2. சூப்பர் செலபிரேஷன் மாதாந்திர திட்டம் (ரூ.500)
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் தினமும் 2 ஜிபி (வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலுடன்) டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இத்துடன் யூடியூப் பிரீமியம், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் PVME, சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லன்கா, பிளானட் மராத்தி, சௌபல், ஃபேன் கோடு மற்றும் ஹொய்சொய் ஆகிய ஓடிடி பலன்களும் அடங்கும். வருடாந்திர திட்டத்தைப் போலவே, இதில் இலவச 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ திட்டம் அடங்கும்.
3. ஃப்ளெக்ஸி பேக் (ரூ.103)
ரூ. 103 விலையில் கிடைக்கும் ஃப்ளெக்ஸி பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு 5 ஜிபி (மொத்த தொகை) டேட்டா, கீழ்வரும் மூன்று பேக்குகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
இந்தி பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ்
சர்வதேச தொகுப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஃபேன்கோட், லயன்ஸ்கேட் மற்றும் டிஸ்கவரி+
பிராந்திய பேக்: ஜியோ ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், கன்ச்சா லங்கா மற்றும் ஹொய்சொய்
இந்த புதிய ப்ரீபெய்ட் பேக்குகள் ஜியோவின் வலைத்தளம் , மைஜியோ செயலியில் கிடைக்கும்.