உலகம்

ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும்.. எலான் மஸ்க் பரபரப்பு கருத்து

Published On 2025-12-08 06:12 IST   |   Update On 2025-12-08 06:12:00 IST
  • 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறியது எக்ஸ்.
  • முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதித்தது.

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் விளம்பர தரவுத்தளத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிவிட்டது என்றும் ஐரோப்பியஒன்றியம் குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், அப்போதுதான் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் நலன்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 முன்னதாக டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை மீறியதற்காக ஆப்பிள் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மொத்தம் 797 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.      

Tags:    

Similar News