உலகம்

Iraq: பற்றி எரியும் பாக்தாத் அமெரிக்க தூதரகம்.. ஈரான் தாக்குதல்

Published On 2026-03-14 12:34 IST   |   Update On 2026-03-14 12:41:00 IST
  • பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் இடம் தாக்கப்பட்டுள்ளது.
  • சரணடையவில்லை என்றால் எண்ணெய் கட்டமைப்புகளையும் அழிக்க வேண்டியிருக்கும்

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது ஒரு ட்ரோன் தாக்குதல் என்று சில பாதுகாப்பு அதிகாரிகள் கூறினாலும், ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கத் தூதரகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பலமான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பாக்தாத் அமெரிக்கத் தூதரக வளாகத்தை ஈரானின் தாக்கியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பிரதான மையமாக செயல்பட்டு வரும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் சரணடையவில்லை என்றால் அங்குள்ள எண்ணெய் கட்டமைப்புகளையும் அழிக்க வேண்டியிருக்கும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே சவூதி அரேபியாவில் பிரின்ஸ் சுல்தான் விமான படைத்தளத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அங்குள்ள 5 அமெரிக்க ராணுவ விமானங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.  

Tags:    

Similar News