உலகம்

ஈரான் பள்ளி தாக்குதலில் கொல்லப்பட்ட 175 சிறுமிகளின் குடும்பங்களுக்கு சீனா 2 லட்சம் டாலர் உதவி

Published On 2026-03-13 20:13 IST   |   Update On 2026-03-13 21:06:00 IST
  • ஈரானில் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல்.

ஈரானின் அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் தாக்குதலில் தெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது மகள் மொஜிதபா காமேனி ஈரான் உச்ச தலைவர் ஆகியுள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஈரானுக்கு சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. பள்ளி தாக்குதலில் கொல்லப்பட்ட  175 சிறுமிகள் குடும்பங்களுக்கு சீன செஞ்சிலுவை சங்கம் மூலம் 2 லட்சம் டாலர் (சுமார் ரூ.1.84 கோடி) வழங்க சீனா முன்வந்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் குவூ ஜியாகுன் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சீன தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு சீனா தனது ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் குவூ குறிப்பிட்டார்.

Tags:    

Similar News