உலகம்

போர்க்கப்பல் தாக்குதல்: 84 வீரர்களின் உடலை ஈரான் அனுப்பி வைத்த இலங்கை | IRIS Dena

Published On 2026-03-13 18:44 IST   |   Update On 2026-03-13 18:44:00 IST
  • எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும்.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மூழ்கடித்தது இதுவே முதல்முறை.

இந்தியாவின் கடற்படை அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன்-2026' சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா' வந்திருந்தது.

பயிற்சி முடிந்து மார்ச் 4 அன்று இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த ஐரிஸ் டெனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரான் கப்பலில் இருந்து 87 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) அன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் 84 பேரின் உடல்களும் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மூழ்கடித்தது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கிடையே கடற்படை உடனடியாகச் செயல்பட்டு 32 பேரை உயிருடன் மீட்டுள்ளது. இவர்களில் 10 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Tags:    

Similar News