உலகம்

Middle East Crisis | மத்திய கிழக்கு போரினால் உலகளவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. சபை

Published On 2026-03-14 03:36 IST   |   Update On 2026-03-14 03:36:00 IST
  • மத்திய கிழக்கு ஆசியாவில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • இதனால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், பாரசீக வளைகுடாவில் உள்ள குறுகலான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. அரபு நாடுகளில் இருந்து இவ்வழியாகத்தான் எண்ணெய் கப்பல்கள் பிற நாடுகளுக்கு பயணித்து வருகின்றன.

உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடக்கும் இக்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்கள்மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்கி வருகிறது. சமீபத்தில் இந்தியா வந்து கொண்டிருந்த தாய்லாந்து கப்பல் உள்பட 3 வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வளைகுடா நாடுகளில் விரிவடைந்து வரும் மோதல் பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் பதற்றத்தை தணித்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News