அறிந்து கொள்ளுங்கள்
விற்பனை பிரிவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆப்பிள் நிறுவனம்
- அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
- நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.
அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.