இந்தியா

Grok AI மூலம் ஆபாச உள்ளடக்கங்கள்.. தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் நிறுவனம்

Published On 2026-01-11 15:13 IST   |   Update On 2026-01-11 15:13:00 IST
  • 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
  • எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.

எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.

மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன. 

Tags:    

Similar News