மிரட்டல் அப்டேட்களுடன் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 15 சீரிஸ்..!
- ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
- நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.
ரெட்மி நிறுவனம், ரெட்மி நோட் 15 5ஜி, நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகியவற்றை போலந்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய நோட் 15 சீரிஸ் உலகளவில் வெளியாகியுள்ளது. இவை பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா கொண்டுள்ளன.
புதிய நோட் 15 5ஜி மாடலில் 6.77-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவை அதிகரித்த பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் சற்றே பெரிய 6.83-இன்ச் CrystalRes பேனல்களுடன் வருகின்றன. மூன்று மாடல்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வருகின்றன.
இத்துடன் நோட் 15 மாடலில் IP65 ரேட்டிங், நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் IP68 ரேட்டிங் உடன் வருகின்றன. நோட் 15 5ஜி 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் பயன்படுத்துகிறது. நோட் 15 ப்ரோ உலகளவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா பிராசஸருடன் வருகிறது. நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப் பயன்படுத்துகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
பேட்டரியை பொருத்தவரை ரெட்மி நோட் 15 மாடலில் 5,520mAh, நோட் 15 ப்ரோ மாடலில் 6,580mAh மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 100W சார்ஜிங் கொண்ட 6,500 mAh யூனிட் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சென்சார்களை கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா உள்ளது. நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.
மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் ஜெமினி AI சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6E, ப்ளூடூத், NFC, GPS/GLONASS/Galileo/BeiDou, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி சி கொண்டிருக்கின்றன.