மொபைல்ஸ்

புத்தாண்டில் புது ஸ்மார்ட்போன்... ரெட்மி வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

Published On 2025-12-11 15:03 IST   |   Update On 2025-12-11 15:03:00 IST
  • இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
  • ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News