தொழில்நுட்பம்

ட்விட்டரில் விரைவில் லைவ் போட்டோஸ் வசதி

Published On 2019-03-23 06:18 GMT   |   Update On 2019-03-23 06:18 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter



ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.

லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
Tags:    

Similar News