தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஐ-கிளவுட் ஸ்டோரேஜ்

Published On 2018-05-27 07:52 GMT   |   Update On 2018-05-27 07:52 GMT
ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இலவசமாக ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் பயன்படுத்துவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ஐகிளவுட் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பி விடுவது தான் எனலாம். 

ஐபோன் புகைப்படங்களை பேக்கப் செய்யும் போது இடையே: உங்களது ஐபோனினை பேக்கப் செய்ய ஐகிளவுடில் போதுமான ஸ்டோரேஜ் இல்லை என்ற தகவல் திரையில் தோன்றி பயனர்களை பதற்றத்தில் ஆழ்த்தும். நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைக்கு தீர்வை ஆப்பிள் வழங்கியுள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் ஒருமாதத்திற்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது. முன்னதாக அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. 5 ஜிபி ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் திட்டம் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் டேட்டா பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து இருக்கும் நிலையில் டேட்டா அளவு கடந்த சில ஆண்டுகளில் நீட்டிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாகவே இருந்தது. ஆப்பிள் சார்பில் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டாவில் வாடிக்கையாளர்கள் அனைத்து வித டேட்டாக்களையும் பேக்கப் செய்ய வேண்டும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவு டேட்டாவை பேக்கப் செய்ய கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.

ஆப்பிள் இவ்வாறு இருக்க மறுபுறம் கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அன்லிமிட்டெட் புகைப்படங்களை அதிக தரத்தில் பேக்கப் செய்ய வழி செய்கிறது. இதற்கு கூகுள் சார்பில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கூகுள் போட்டோஸ் செயலியில் இதற்கு அன்லிமிட்டெட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் தற்சமயம் அறிவித்து இருக்கும் ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் ஒரு மாதத்திற்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News