நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரி 5-ம் நாள்... அறிவாற்றல், செல்வத்தை அருளும் வைஷ்ணவி வழிபாடு

Published On 2025-09-26 12:57 IST   |   Update On 2025-09-26 12:57:00 IST
  • திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
  • வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.

வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

"வருவாய் வருவாய் வைஷ்ணவியே

வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே

அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"

என பாடி துதித்தால் வரம் தருவாள்.

வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.

Tags:    

Similar News