நவராத்திரி 3-வது நாளில் வழிபட வேண்டிய தெய்வம்
- சந்திரகாந்தா தேவி துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்.
- அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.
நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் ஆவார்.
சந்திரகாந்தா தேவி
பார்வதி தேவி, மகிஷாசுரனை அழிக்க சக்தியாகிய துர்காவாக அவதரித்தபோது பல்வேறு வடிவங்களில் தோன்றினாள்.
சத்யுகத்தில், ஹிமவந்தன் (இமயமலை) மகளான பார்வதி, சிவபெருமானை கணவனாகப் பெற விரும்பினார். அவர் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சிவனைத் துதித்தார். இறுதியில் சிவபெருமான் சம்மதித்து, அவர்களின் திருமண நாள் நிர்ணயிக்கப்பட்டது. பார்வதி திருமண அலங்காரத்தில் புனித வடிவம் எடுத்தார். அப்போது அவரது நெற்றியில் நிலவும் பிரகாசத்தைப் போல ஒரு சந்திரக்கலையுடன் தோன்றினார். அந்த வடிவமே சந்திரகாந்தா.
சந்திரகாந்தா தேவியின் கதை:
முன்னொரு காலத்தில் அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான். அவனது சக்திக்கு முன் தேவதைகள் பலவீனமடைந்தனர். அப்போது, மகாதேவி பார்வதி ஒரு புதிய ரூபத்தில் தோன்றி, தன் நெற்றியில் சந்திரனை அலங்கரித்து, சிங்கத்தில் ஏறி, கையில் பல ஆயுதங்களுடன் அசுரர்களை அழிக்க முனைந்தார்.
ஜதூகசுரன் மிகுந்த பலம் நிறைந்தவனாக இருந்தான். அவனை எதிர்த்து, சந்திரகாந்தா தேவி தேவசேனையை வழிநடத்தி யுத்தம் புரிந்தார். அவர் சிங்கத்தில் ஏறி கம்பீரமாக போராடினார். அசுரர்களின் பல ஆயிரம் படைகளை அழித்து, இறுதியில் ஜதூகசுரனையும் வதம் செய்தார்.
சந்திரகாந்தா தேவியின் கதை, தைரியம், கருணை மற்றும் நீதியின் சக்தி என்பதைக் காட்டுகிறது.
சிவபெருமானை மணந்த பிறகு அவள் தலையை அரை நிலவால் அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துணிச்சலையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறார். அவள் பத்து கைகளுடன் திரிசூலம், கதாயுதம், வில், அம்பு, தாமரை, வாள், மணி மற்றும் ஒரு நீர்க்குடம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறாள். அவள் புலியின் மீது அமர்ந்திருப்பாள்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி சந்திரகண்டாயை நமஹ" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.