உலகம்

உணவு கிடைக்காமல் மண்ணை சாப்பிடுகிறோம்.. இரக்கம் காட்டுங்கள் - காசா சிறுவனின் கலங்க வைக்கும் வீடியோ

Published On 2025-06-20 13:50 IST   |   Update On 2025-06-20 13:50:00 IST
  • உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
  • நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500 க்கும் அதிகாமாக பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறினார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த விதமான உணவு மற்றும் உதவிப் பொருட்களை செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக உதவி பொருட்களை அனுமதிக்கும் இஸ்ரேல், அந்த செயல்முறையை தங்கள் கட்டிபாட்டில் எடுத்துக்கொண்டு, உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.

அவ்வாறு உயிரை பணயம் வைத்து உதவிகளை பெற்றாலும், அது மிகவும் சொற்ப அளவே கிடைப்பதால் மருந்து மற்றும் உணவின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில் பேசும் சிறுவன், "காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம்.. இரக்கம் காட்டுங்கள் - கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ

காசாவில் தற்போது ஒரு ரொட்டித் துண்டின் விலை 5.30 டாலர் (570 ரூபாய்). அந்த ஒரு ரொட்டித் துண்டும் மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை" என்று கூறுவது பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News