ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மொத்தமாக அழிப்பு - டிரம்ப்
- இஸ்ரேல் - ஈரான் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
- ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதனையாடடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக வலைத்தள, "செயற்கைக்கோள் படங்கள் காட்டியுள்ளபடி, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய சேதம் தரை மட்டத்திற்கு கீழே நடந்தது" என்று பதிவிட்டுள்ளார்.