உலகம்

நேபாள பாராளுமன்ற தேர்தல்: பாலேந்திர ஷா பிரதமராகிறார்

Published On 2026-03-07 04:29 IST   |   Update On 2026-03-07 04:29:00 IST
  • வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
  • இளைஞர் போராட்டங்களின் போது ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி முக்கிய பங்காற்றியது.

காத்மண்டு:

நேபாளத்தில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு ஜென் இசட் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஒலி பதவி விலகலுக்கு பிறகு அங்கு தேர்தல் நடந்தது.

பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 275 இடங்கள் உள்ளன. இதில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை.

தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் கே.பி.சர்மா ஒலியும், நேபாளி காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் ககன் தாபாவும் பிரதமா் வேட்பாளா்களாகக் களமிறங்கினா்.

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

இதற்கிடையே, வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு எண்ணும் பணி மும்முரமாக நடந்தது. இதில் 160 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியான நிலையில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 110 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி சாா்பில் 35 வயதான காத்மாண்டு பெருநகர மேயா் பாலேந்திர ஷா பாலன் அதிக இடங்களில் வென்று நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரது வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News