உலகம்

Iran | படிப்படியாக நிர்வாக செயல்பாடுகள் தொடங்கும் என ஈரான் அறிவிப்பு..!

Published On 2026-03-06 17:01 IST   |   Update On 2026-03-06 17:01:00 IST
  • 20 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும்.
  • மானேஜர் ரேங்கில் உள்ளவர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல் இன்றுடன் 7-வது நாளாக நீடிக்கிறது. அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1332 பேர் கொல்லப்பட்டன. அமெரிக்கா- இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் கடந்த ஒரு வாரமாக அரசு செயல்பாடுகள் (பணிகள்) முடங்கியிருந்தன. இந்த நிலையில் நாளை மறுநாள் இருந்து படிப்படியாக நிர்வாக செயல்பாடுகள் தொடங்கும் என ஈரானி அறிவித்துள்ளது.

அனைத்து அமைச்சர்கள், அமைப்புகள் மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் நிர்வாக செயல்பாடுகள் படிப்படியாக தொடங்கும். தெஹ்ரான் பிராந்தியங்களில் 20 சதவீதம் பணியாளர்களுடன் நாளை மறுநாள் (ஞாயிறு) முதல் செயல்பட தொடங்கும்.

ரிமோட் மூலம் அனைத்து பெண் பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட வங்கிகள் திறக்கப்படும்.

அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடரும். மானேஜர் ரேங்கில் உள்ள அனைவருக்கும் ரிமோட் பணி என்பது கிடையாது. அலுவலகத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

Tags:    

Similar News